search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரான் கான் கூறிய அறிவுரையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது நிராகரித்தார்.
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். சிறந்த ஆல்ரவுண்டரான அவர் 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

    உலக கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

    கடைசி பந்து வரை போராடும் படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும், அவர் கேட்டு இருந்தார்.

    ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் முதல் 10 ஓவரில் பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார்.

    ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் முதல் 10 ஓவர்களில் இந்திய விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.

    விராட் கோலியும், பந்துவீச்சைத் தான் நாங்கள் முதலில் தேர்வு செய்து இருப்போம் என்று கூறி இருந்தார்.
    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    மான்செஸ்டர்:

    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றியை பெற்றது.

    மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது.

    ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 பந்தில் 140 ரன்னும் (14 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 65 பந்தில் 77 ரன்னும் (7 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது அமீர் 3 விக்கெட்டும், ஹசன் அலி, வகாப், ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

    இதனால் டக்வொர்த்- லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 ரன் இலக்காக இருந்தது. அந்த அணி 212 ரன்னையே எடுத்து இருந்ததால் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பகர்ஜமான் அதிக பட்சமாக 62 ரன்னும், பாபர் ஆசம் 48 ரன்னும், இமாத் வாசிம் 46 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர், ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 7-வது முறையாக வீழ்த்தியது. இதுவரை ஒருமுறைகூட தோற்கவில்லை.

    இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி கூறும் போது, குல்தீப் யாதவின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் எந்தவித வித்தியாசத்தையும் தரவில்லை. நான் ‘டாஸ்’ வென்று இருந்தாலும் பந்து வீச்சைதான் தேர்வு செய்து இருப்பேன். இந்த பிட்சில் 2-வது பேட்டிங் செய்யும் போது பந்து நன்றாக திரும்பியது. சரியான பகுதியில் நேர்த்தியாக வீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க முடியும்.

    ரோகித் சர்மா மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ராகுல் உதவியாக இருந்தார். ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் என்பதை ரோகித்சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். வீரர்களின் கூட்டு முயற்சியால் 336 ரன்களை குவித்தோம்.

    குல்தீப் யாதவ் அற்புதமாக பந்து வீசினார். பாபர்ஆசமும், பகர்ஜமாலும் நிலைத்து ஆட முயற்சித்தனர். ஆனால் அவர்களை நீண்ட நேர விளையாட விடக்கூடாது என்று விரும்பினேன். பாபர் ஆசமை குல்தீப் யாதவ் அவுட் செய்த பந்து அருமையானது. இந்த உலக கோப்பையில் இதுதான் சிறந்த பந்து வீச்சாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தியது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடாது என்று விரும்பினோம். அப்படி செய்தால் அது தவறாக போகக் கூடும்.

    அந்த பார்வையோடு பாகிஸ்தானை நாங்கள் அணுகவில்லை. விளையாட்டை விளையாட்டாகவே பார்த்தோம். அதிகமாக உணர்ச்சி வசப்படாததால் வெற்றி பெற முடிந்தது.

    இவ்வாறு கோலி கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

    டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனால் எங்கள் பவுலர்கள் சரியான பகுதியில் நேர்த்தியாக வீசவில்லை.

    ரோகித் சர்மாவை எப்படி அவுட் செய்வது என்று திட்டமிட்டோம். அதை சரியாக செயல்படுத்தவில்லை. எங்கள் திட்டத்தை அவர் தவிடு பொடியாக்கி விட்டார். இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சும் நேர்த்தியாக இருந்தது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

    இந்த தோல்வியால் இனி வரும் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 7 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்திய அணி 5-வது ஆட்டத்தில் ஆப்காஸ்தானை வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) சந்திக்கிறது.

    பாகிஸ்தான் 6-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 23-ந்தேதி எதிர்கொள்கிறது.
    பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு வெளியேறினார்.
    மான்செஸ்டர்:

    கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஏதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உள்பட 140 ரன்களை விளாசினார். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லுவிஸ் முறைபடி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அப்போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து சதத்தினை நெருங்கி கொண்டிருந்தார். அப்போது 48 வது ஓவரினை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வீசினார். அதனை எதிர்கொண்ட விராட் கோலி பவுன்சர் பந்தினை சுழற்றி அடிக்க முற்பட்டபோது அது பேட்டில் படாமல் கீப்பரின் கைக்கு சென்றது. ஆனால் கோலி பந்து பேட்டில் உராய்ந்து விட்டதாக நினைத்து உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் போட்டி நடுவர் கோலிக்கு அவுட் கொடுக்கவில்லை. மேலும் கோலி களத்தை விட்டு சென்ற பின்னர், அவர் அவுட் ஆனதாக கருதப்பட்ட பந்து வீச்சின் வீடியோவினை மறு ஆய்வு செய்த போது பேட்டிற்கும், கடந்து சென்ற பந்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மைதானத்திலிருந்து வெளியேறி தனது அறைக்கு சென்ற விராட் கோலி, அவசரப்பட்டு தான் செய்த தவறை நினைத்து மிகவும் நொந்து போனார்.

    ஆனால் கோலி பேட்டினை சுழற்றியபோது, அதில் சில முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர் பந்து தான் பேட்டில் பட்டுவிட்டதாக நினைத்து களத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என போட்டி வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியாயினும்,பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் நாடு முழுவதும் இந்த வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியின் காரணமாக, 2019 உலகக்கோப்பை போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று (தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்) வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு ஏதிரான போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ஏழு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 


    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசியதன மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப் பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார்.

    உலக கோப்பை போட்டி யில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார். 122 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் ரோகித் சர்மா சதம் அடித் தார். 140 ரன்கள் குவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    கடந்த உலக கோப்பையில் டோனி பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சூரி அடித்து இருந்தார்.

    209-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு இது 24- வது சதமாகும்.

    ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 85 பந்தில் சதம் அடித்தார். இது அவரது 3-வது அதிவேக சதமாகும்.


    கடந்த ஆண்டு அவர் இங்கிலாந்துகக்கு எதிராக 82 பந்தில் செஞ்சூரி அடித்ததே அதிவேகமாக இருக்கிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 84 பந்தில் சதம் அடித்து இருந்தார். இங்கிலாந்து மைதானத்தில் ரோகித்தின் 4-வது சதமாகும். இதன் மூலம் அவர் தவான், ரிச்சார்சுடன் இணைந்தார்.

    ரோகித் சர்மா நேற்று 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் உள்ளார். அவர் டோனியை முந்தினார்.


    ரோகித்சர்மா 358 சிக்சருடன் முதல் இடத்திலும், டோனி 355 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், தெண்டுல்கர் 264 சிக்சர்களுடன் 3-வதுஇடத்திலும், யுவராஜ்சிங் 251 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கங்குலி 247 சிக்சருடன் 5-வது இடத்திலும், ஷேவாக் 243 சிக்சருடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியிம் மொர்டாசா தலைமையிலான வங்காளதேசம் அணியும் மோதுகின்றன.
    டான்டன்:

    12-வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    19-வது நாளான இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் - மொர் தாசா தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 1 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற் றுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன் ரேட்டில் வங்காளதேசத்தை விட வெஸ்ட்இண்டீஸ் முன்னணியில் உள்ளது.

    இதனால் 2-வது வெற்றியை பெற்று முன்னேற்றம் அடையப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவிடம் 15 ரன்னிலும், இங்கிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவை 21 ரன்னில் வீழ்த்தியது. நியூசிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்திடம் 106 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. இலங்கையுடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது போல வெஸ்ட்இண்டீசுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்தில் வங்காளதேசம் உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சமீபத்தில் 2 முறை வீழ்த்தி இருந்தது. இதனால் வங்காளதேச அணி நம்பிக்கையுடன் உள்ளது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெய்ல், ரஸ்சல், ஹெட்மயர், ஹோப் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமாரின் காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.



    இந்திய அணி டாக்டர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து போட்டிக்கு தயார்படுத்த முயன்றார். ஆனாலும் புவனேஷ்வர் குமாரால் முடியவில்லை. இதனால் அவர் போட்டியில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-



    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்து 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக முகமது சமி களம் இறங்குவார்.

    அடுத்து 3 ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 22-ம் தேதியும், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 27-ம் தேதியும், இங்கிலாந்து அணியுடன் 30-ம் தேதியும் விளையாட உள்ளது.
    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை படைத்துள்ளார்.
    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய்சங்கர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருவருக்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தவான் காயம் அடைந்ததால் விஜய்சங்கருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க வீரர் தவான் ஆடவில்லை. இதனால் 4-வது வரிசையில் ஆடும் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடினார்.

    எனவே ராகுலின் இடமான 4-வது வீரர் வரிசைக்கு விஜய்சங்கர் தேர்வானார். தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

    28 வயதான விஜய்சங்கர் உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்திலேயே பந்து வீச்சில் முத்திரை பதித்தார்.

    நெல்லையைச் சேர்ந்த அவர் 5.2 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக், கேப்டன் சர்பிராஸ் அகமது ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.

    புவனேஸ்வர்குமார் 3-வது ஓவரின் 4-வது பந்தில் காயம் அடைந்தார். இதனால் அவரது 2 பந்துகளை விஜய்சங்கர் வீசினார். தனது முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கை அவர் எல்.பி.டபிள்யூ செய்தார்.

    இதன் மூலம் உலக கோப்பையில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.



    சர்வதேச அளவில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 3-வது வீரர் விஜய்சங்கர் ஆவார். இதற்கு முன்பு பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ், ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹார்வி ஆகியோர் உலக கோப்பையில் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்து இருந்தனர்.

    விஜய்சங்கர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்திக் கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றார்.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

    ரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.



    சுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ரன்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

    விஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

    பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறக்கியது. இந்நிலையில் 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 35 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் சமான் 62(75) ரன்களும், பாபர் அசாம் 48(57) ரன்களும் எடுத்திருந்தனர். இமாத் வாசிம் 22(20) ரன்களும், சதாப் கான் 1(2) ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 


    இரண்டாவது முறை மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.  பாக். அணி 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. டி.எல்.எஸ். முறைப்படி பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.

    இதனை தொடர்ந்து ஆடிய பாக். அணி வீரர்கள் இமாத் வாசிம் 46 (39) ரன்களும், சதாப் கான் 20(14) ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

    இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

    2.4 ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறிய புவனேஷ்வர் குமார் பீல்டிங் செய்ய வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பின்னர் 337 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 4-வது பந்தை வீசியபோது அவரது காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. ஆகவே 2.4 ஓவர்கள் வீசியதுடன் வெளியேறினார்.

    இந்திய அணி டாக்டர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து போட்டிக்கு தயார்படுத்த முயன்றார். ஆனாலும் புவனேஷ்வர் குமாரால் காலை வலிமையாக ஊன்ற முடியவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவர் எஞ்சிய ஓவர்களை வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் பந்து வீசாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

    ரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    சுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ரன்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.



    விஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

    ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது அமிர் வீசினார். லோகேஷ் ராகுல் 6 பந்திலும் ரன்ஏதும் சேர்க்கவில்லை. இதனால் முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. இருவரும் முகமது அமிர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடினர். மறுமுனையில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் பந்து வீச்சை அடித்து விளைாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    பவர் பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா 53 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த ஓவரில் இந்தியா 17 ரன்கள் விளாசியது. ரோகித் சர்மா 4-வது பந்தை சிக்சருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார். அத்துடன் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.



    மறுமுனையில் நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 69 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 23.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லோகேஷ் ராகுல் 78 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். அதேவேளையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரன் உயர்வில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    இதனால் இந்தியா 34.2 ஓவரில்தால் 200 ரன்னைத் தொட்டது. ரோகித் சர்மா 85 பந்தில் சதம் அடித்தார். அவரது 2-வது அரைசதம் 51 பந்தில்தான் வந்தது. சதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 113 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 38.2 ஓவரில் 234 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், 19 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த டோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் சற்று மந்தம் ஏற்பட்டது.



    இந்தியா 45.4 ஓவரில் இந்தியா 300 ரன்னைக் கடந்தது. 46.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்னாக இருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 62 பந்தில் 71 ரன்களுடனும், விஜய் சங்கர் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

    ஒருவேளை மழை நீண்ட நேரம் பெய்தால், இந்தியாவின் இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைய வாய்ப்புள்ளது.
    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலகக்கோப்பையின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய லோகுஷ் ராகுல் 69 பந்தில் அரைசதம் அடித்தார்.



    அரைசதம் அடித்த ரோகித் சர்மா அதன்பின் தனது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் அதிரடியை காட்டவில்லை. என்றாலும், சதத்தை நோக்கிச் சென்றார். இறுதியில் 85 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் அவரது 2-வது சதம் இதுவாகும். லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    ×