search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதற்கு கவுதம் காம்பீர் ஐசிசி மீது சாடியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நாடடிங்காமில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    மழை 2-3 மணி நேரத்தில் நின்றுவிட்டது. அவுட்பீல்டு (பவுண்டரி லைன் அருகில்) ஈரப்பதம் காணப்பட்டதால் பீல்டிங் செய்வதற்கும், கேட்ச் பிடிப்பதற்கும் கடினமாக இருக்கும் என்பதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது.

    இதற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘பாதுகாப்பான வசதிகளை ஐசிசி இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும். மழை 2-3 மணி நேரத்திற்குள் நின்றுவிட்டது. இருந்தாலும் போட்டி தொடங்கப்படவில்லை.

    கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யும் என்பது எதிர்பார்க்கபட்ட ஒன்றுதான். ஆகவே, மைதானம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவுட்பீல்டு தயார் ஆவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை தவிர்த்திருக்கலாம்.



    போட்டி வெளிச்சமின்மை, மின்சார கோபுரம் கோளாறு என மற்ற ஏதாவது காரணத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், இது அதுபோன்ற விவகாரம் கிடையாது. ஐசிசி இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால் உலகளாவிய தொடர். பல மணி நேரம் காத்திருக்கும் ரசிகர்களுக்கும், டிவி-யில் போட்டியை பார்க்க காத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகபந்து வீச்சாளரான ஜோல் கார்னர், 40 வருடத்திற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திழந்தவர் ஜோல் கார்னர். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவரது பந்து வீச்சு, 1979-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது.

    1979-க்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை சரியான கலவை கொண்ட அணியாக வெஸ்ட் இண்டீஸ் திகழ்கிறது. இதனால் 40 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஜோல் கார்னர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோல் கார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் எதிர்பார்த்தது தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நாங்கள் விளையாடுவதை வைத்து பார்க்கும்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம்.

    இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டால், அதன்பின் கோப்பையை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. நான் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்தன் என்பதால், நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அரையிறுதி போட்டி வாய்ப்பை பெறும்போது, உண்மையான கிரிக்கெட் யுத்தம் ஆரம்பமாகும்.



    கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுமையாக உழைக்கிறார். மேலும் சிறந்த கேப்டனாக மாறிக் கொண்டிருக்கிறார். அவர் உலகக்கோப்பையை கையில் ஏந்தினால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் நாங்கள் உலகக்கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றார்.
    காயம் காரணமாக ஓய்வில் உள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம் அடைந்தார். அவரது பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2 முதல் 3 வார காலம் விளையாட முடியாது.

    இதனைத்தொடர்ந்து ரிஷப் பந்த் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆகையால் பந்த் இங்கிலாந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தவான் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் ஷிகர் தவானை பொருத்தவரை கை விரலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் விரைவாக குணம் அடைந்து வருகிறது. தவான் ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன். தான் எப்படியாவது உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகப்படியாக உள்ளது. அத்தகைய எண்ணங்கள் தவான் காயத்திலிருந்து விரைவாக மீண்டு வர உதவிகரமாக அமையும்.



    மேலும், லீக் ஆட்டங்களில் மாற்று வீரர்களாக விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப களமிறக்கி விளையாட உள்ளோம். ஆனால் அரையிறுதி ஆட்டங்களுக்கு முன்னதாக நிச்சயம் தவான் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என நம்புகிறோம். ஆகையால் தவானுக்கு பதிலாக உலகக்கோப்பை முழுவதற்குமான மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை.

    இவ்வாறு கோலி கூறினார்.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற உள்ளது என்பது. அதில் தவானுக்கு பதில் களம் இறங்கும் வீரர் யார் என்பது தெரிந்துவிடும்.
    உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற உள்ள 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் விளையாட்டினை பொருத்தவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு கிர்க்கெட் ரசிகர்களிடையேயும் மிகுந்த ஏதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே ஆன வித்தியாசம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு ஏதிரான பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தினை பார்த்தேன். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 308 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 136 ரன்களுக்கு 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் போட்டியின் முக்கியமான பகுதியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது நெருக்கடியை கையாள முடியாமல் தோல்வியினை தழுவினர்.

    ஆனால் இந்திய அணியினை பொருத்தவரை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடக்க வீரர்கள் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து வருகின்றனர். விராட் கோலி அணியினை நிலைப்படுத்துவதற்கு முக்கிய வீரராக உள்ளார். டோனி மற்றும் பாண்டியா போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையின்போது அணியினை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பினை சரிவர செய்து வருகின்றனர்.



    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை பொருத்தவரை போட்டியின் நெருக்கடியை கையாள்வதே இரு அணிகளுக்கு இடையே ஆன வித்தியாசமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட்டினை பொருத்தவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
    உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    சவுதாம்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுதாம்டனில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  

    இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

    இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் , மார்க்வுட்.

    வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லுயிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஷினான் கேப்ரியல், ஆந்த்ரே ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ். 
    நாட்டிங்காமில் நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றில் இருந்து நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்தது. இதனால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது.

    போட்டிக்கான டாஸ் சரியாக 2.30 சுண்டப்படும். அப்போது மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்தது. இதனால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து டாஸ் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவித்த மறுநிமிடத்தில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இந்திய நேரப்படி போட்டி தொடங்கும் மதியம் 3 மணியில் இருந்து இரவு 7.40 மணி வரை மழை ஓயவில்லை.



    இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
    மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளான இந்தியா போட்டியில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறக்கூடிய ஆட்டம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா மூலம் மூன்று போட்டிகளில் உள்ளது. முக்கிய எதிரியாக நினைக்கும் இந்தியாவை வருகிற ஞாயிற்றுக்கிழமை (16-ந்தேதி) நடக்கிறது. இதில் ஒருவேளை பாகிஸ்தான் தோற்றுவிட்டால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.

    ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே மிகப்பெரிய நெருக்கடி இருக்கும். நெருக்கடியான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளதால், மிகவும் நெருக்கடிக்குள்ளான போட்டியாக கருதப்படும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகவும் நெருக்கடிக்குள்ளான ஆட்டம். இந்த போட்டிக்கு பின்னால் ஏராளமான மர்மங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நாங்கள் எங்களுடைய கிரிக்கெட் பலத்துடன், எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம்’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும். அதில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்பது குறித்து பிரபலங்கள் கணித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில் ‘‘உலகக்கோப்பை இறுதிப் போட்டி இந்தியா - இங்கிலாந்துக்கு இடையில்தான் நடக்கும். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டும் மிகமிக சிறந்த அணி. இந்தியா கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும்.

    நான் முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது, பேஸ்பால் ஆட்டத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தேன். அந்த வகையில் கிரிக்கெட்டை விட அது சற்று சவாலானது என்று நான் சொல்வேன். என்னுடைய முதல் ஆட்டத்தால் நான் பெருமை அடைந்தேன். ஏனென்றால், நான் அடித்த பந்து பின் பக்கம் வெகுதூரம் சென்றது. கிரிக்கெட்டில் அது சிறந்த ஷாட். அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஷாட் என்று நினைத்தேன். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.



    கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஓடும்போது தன்னுடன் பேட்டையும் கொண்டு செல்வார். ஆகவே, நான் பேட்டுடன்தான் ஓடுவேன். அது சற்று கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். பல விஷயங்களை மாற்றியுள்ளேன். ஆனால், கிரிக்கெட்டுதான் என்னுடன் ஒட்டுக்கொண்டிருக்கிறது’’ என்றார்.
    நாட்டிங்காமில் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியாக 2.30 மணிக்கு சுண்டப்படும். ஆனால், நேற்று நாட்டிங்காமில் கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என வானிமை மையம் தெரிவித்தது.

    2.30 மணிக்கு மழை பெய்யவில்லை. என்றாலும் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் போட்டி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
    டான்டன்:

    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ரன்னில் அவுட்டாகினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 

    பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.

    அதன் பின்னர், 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

    பாபர் அசாம் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 46 ரன்னிலும், ஹசன் அலி 35 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதிக்கட்டத்தில் கேப்டன் சர்ப்ராஸ் அகமதும், வஹாப் ரியாசும் வெற்றிக்காக போராடினர். ரியாஸ் 45 ரன்னில் அவுட்டானார். சர்ப்ராஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 9.5 ஓவரில் ஆஸ்திரேலியா 50 ரன்னைத் தொட்டது. அதன்பின் ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.



    பிஞ்ச் 63 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வார்னர் 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 22.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது, பிஞ்ச் 84 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்தார்.

    அதன்பின் வந்த ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.

    பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    1999 உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் ஆதிக்கம் செலுத்தியதுபோல், தற்போது ஹர்திக் பாண்டியா ஜொலிப்பார் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர்கள் அதிக்கம் செலுத்துவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதில் முக்கிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது வீரராக களம் இறங்கிய பாண்டியா, 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் குளுஸ்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாக்அவுட் சுற்றில் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.



    இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை குளுஸ்னருடன் ஒப்பிட்டார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். ஹர்திக் பாண்டியா குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய அதிரடி ஆட்டம், மற்ற அணிகளுக்கு பீதியை கிளப்பியிருக்கும். 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் குளுஸ்னர் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் ஹர்திக் பாண்டியா இந்த முறை ஆதிக்கம் செலுத்துவார். தனது அதிரடி ஆட்டத்தின்மூலம் போட்டியை சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்றார்.
    ×