search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    வங்காள தேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பையில் 500 ரன்களுடன் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் வங்காள தேச வீரர் புதிய சாதனை படைத்தார். அவர் நேற்று இந்தியாவுக்கு எதிராக 66 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 542 ரன்களை தொட்டார். 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    உலகக்கோப்பையில் 500 ரன்னுக்கு மேல் குவித்தும் 10 விக்கெட் டுக்கு மேலும் எடுத்தவர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்தார்.

    இதற்கு முன்பு நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் ஸ்டைரிஸ் 2007 உலக கோப்பையில் 449 ரன்கள் குவித்து 9 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருந்தது. இதை ஷாகிப் முறியடித்தார்.

    ஹிட்மேன் கேட்ச் மிஸ்சிங் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தி 369 ரன்கள் குவித்ததுடன் மூன்று செஞ்சூரியும் அடித்து அசத்தியுள்ளார்.
    உலகக்கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் செய்து நான்கில் சதம் அடித்துள்ளார். மழையால் ஒரு ஆட்டத்தில் விளையாடவில்லை.

    ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா,  இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைக்கொடுத்தது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நான்கு அணிகள் ஐந்து முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்ச்-ஐ பிடிக்க தவறவிட்டன. இதில் தென்ஆப்பிரிக்கா இரண்டு முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க தவறியது.

    இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். கேட்ச் மிஸ்சிங் செய்த பிறகு ரோகித் சர்மா 369 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரோகித் சர்மா 544 ரன்கள் குவித்துள்ளார். நான்கு அணிகளும் சரியாக கேட்ச் பிடித்திருந்தால் ரோகித் சர்மா 175 ரன்களே சேர்த்திருப்பார். அதிர்ஷ்டம் அவருக்கு அதிக அளவில் கைக்கொடுத்துள்ளது.

    ரோகித் சர்மா கேட்சை தவறவிட்ட தமிம் இக்பால்

    ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக டேஸ்ட் வார்னர் இரண்டு முறை கேட்சில் இருந்து தப்பித்து 156 ரன்கள் சேர்த்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 4 கேட்சில் இருந்து தப்பித்து 142 ரன்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 5 கேட்சில் இருந்து தப்பித்து 118 ரன்கள் அடித்துள்ளார். மோர்கன் ஒரு கேட்சில் இருந்து தப்பித்து 116 ரன்கள் சேர்த்துள்ளார்.
    அவுட் பீல்டில் ரிஷப் பந்த் வேகமாக ஓட வேண்டும். அதேபோல் பந்தை த்ரோ செய்வதில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய போட்டியின்போது பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அவரது பீல்டிங் பல குறைகள் இருந்தன.

    இந்நிலையில் ரிஷப் பந்த் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பந்த் பீல்டிங் குறித்து பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ரிஷப் பந்துக்கு பீல்டிங் குறித்து அதிக அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவர் பந்தை த்ரோ செய்யும் டெக்னிக்கலில் முன்னேற்றம் அடைவது அவசியம். அத்துடன் அவுட்பீல்டு பகுதியில் வேகமாக ஓட வேண்டும்.

    ரிஷப் பந்த் எம்எஸ் டோனி

    அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது ஐந்து ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு மிகப்பெரிய போனஸாக அமைந்தது. சிறப்பாக கேட்ச் பிடித்தார்’’ என்றார்.
    அப்பீல் விவகாரத்தில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் விராட் கோலி அடக்கி வாகிக்காவிடில், இரண்டு போட்டிகளில் தடையை சந்திக்க நேரிடும்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர். ஒவ்வொரு பந்துக்கும் எமோசனை வெளிப்படுத்துவார். ஆன்-பீல்டு நடுவர்கள் சில நேரங்களில் இந்தியாவுக்கு எதிராக தவறான முடிவுகளை கொடுத்துவிட்டால், தவறுகலாக கொடுத்து விட்டார் என்று எளிதாக கடந்து சென்று விடமாட்டார்.

    நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அப்படித்தான் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு அபராதத்துடன் தகுதியிழப்பு புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.

    ஐசிசி விதிப்படி 24 மாதத்திற்குள் நான்கு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடைவிதிக்கப்படும்.

    விராட் கோலி

    கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஒரு தகுதியிழப்பு புள்ளி பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஒரு புள்ளி பெற்றார். இதனால் விராட் கோலி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளார்.

    நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமி வீசிய பந்தை சவுமியா சர்கார் தடுத்தாட முயன்றார். அப்போது பந்து பேடில் பட்டது. நடுவரிடம் அப்பீல் கேட்க அவர் மறுத்துவிட்டார். இதனால் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தினார் விராட் கோலி. அப்போது பந்து பேட்டிலும், பேடிலும் ஒருசேர டச் ஆனது போன்று தெரியவந்தது. இதனால் குழப்பம் அடைந்த 3-வது நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமான வகையில், பந்து முதலில் பேட்டில் பட்டதாக அறிவித்ததோடு, இந்தியாவுக்கு ரிவியூ வாய்ப்பு கிடையாது எனவும் அறிவித்தார்.

    இதனால் கோபம் அடைந்த விராட் கோலி ஆன்பீல்டு நடுவர்களிடம் விவாதம் செய்தார். விராட் கோலியின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் நடுவரிடம் அபராதத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், நடுவர்கள் இதுகுறித்து புகார் செய்யவில்லை.

    விராட் கோலி

    ஒருவேளை இலங்கைக்கு எதிரான போட்டியில் இதுபோன்று செயல்பட்டால் கட்டாயம் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை இரண்டு புள்ளிகள் பெற்றால் விராட் கோலியால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்படியிருந்தால், இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

    இதனால் விராட் கோலி நடுவர்கள் விவகாரத்தில் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது அவசியம்...
    முக்கியத்துவம் வாய்ந்த நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் இன்று மதியம் 3 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    நெருக்கடியான நேரத்தில் சேஸிங் செய்து தோல்விகளை சந்தித்துள்ளதால், இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் முதலில் பேட்டிங் செய்துதான் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோகித் சர்மாதான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
    இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 314 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 104 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவின் நான்காவது சதம் இதுவாகும். சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவை இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக நான் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர்தான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர். அவர் சிறப்பாக விளையாடும்போதெல்லாம், இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கிச் செல்லும்.

    ரோகித் சர்மா விராட் கோலி

    அவர் விளையாடுவதை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்த உலகக்கோப்பையை அவரது வாழ்க்கையாக எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை பார்க்க ஜாலியாக உள்ளது’’ என்றார்.
    17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அச்சுறுத்தலாக இருந்த பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளதால் இங்கிலாந்து சற்று ஆறுதல் அடைந்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இங்கிலாந்துக்கு உள்ளது. அந்த அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி தற்போது கிடைத்துள்ளது.

    அந்த செய்தி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்பதுதான். மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வந்த  நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பெர்குசன் 7 போட்டிகளில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

    தற்போது அவர் அணியில் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், வங்காள தேசத்தை 28 ரன்களில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    பர்மிங்காம்:

    இந்தியா - வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர்.

    உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 48 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்துள்ளது. 

    வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ருபெல் உசேன், சவுமியா சர்க்கார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    5 விக்கெட் வீழ்த்திய முஷ்டாபிஜுர் ரஹ்மான்

    இதைத்தொடர்ந்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், சவுமியா சர்க்காரும் ஆடினர்.

    தமிம் இக்பால் 22 ரன்னிலும், சவுமியா சர்க்கா 33 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 24 ரன்னிலும், லிட்டன் தாஸ் 22 ரன்னிலும், மொசாடாக் ஹுசேன் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அசத்தினார். அவர் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், முகமது ஷைபுதின் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், வங்காள தேசம் 50 ஓவரில் 286 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலகக்கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஷமி, சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கான வருங்கால நம்பர்- 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் 4-வது இடத்திற்கு நிலையான பேட்ஸ்மேனை இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ளது. அம்பதி ராயுடுவை அந்த இடத்திற்கு தயார் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும்  நியூசிலாந்து தொடரின்போது மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ஒன்றிரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை களம் இறக்கினர். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் களம் இறக்கியது. அதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயத்தால் விலகியதால் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் வருங்காலத்திற்கான இந்திய அணியின் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காலத்திற்கான நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பந்தை சரியான வகையில் உருவாக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.


    ரோகித் சர்மாவின் அபார சதம், லோகேஷ் ராகுலின் அரைசதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
    பர்மிங்காம்:

    இந்தியா - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

    பவர்பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது என்ற கடும் விமர்சனத்திற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்துள்ளது. வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர்.

    அரைசதமடித்த லோகேஷ் ராகுல்

    உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கியவர்களில் ரிஷப் பந்த் அரை சதமடிக்க தவறினார். அவர் 48 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, வங்காள தேசத்துக்கு 315 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ருபெல் உசேன், சவுமியா சர்க்கார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்திற்குப்பின் மைக்கேல் வாகன் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு இந்த நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும். மேலும், அரையிறுதியில் இந்த அணிகள்தான் மோதும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஆட்டத்தின் முடிவு அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று எனக்குத் தோன்றுகிறது.

    மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா (1) - நியூசிலாந்து (4) அணிகள் மோதும். பர்மிங்காமில் நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா (3) - இங்கிலாந்து (3) அணிகள் மோதும்’’  என்று தெரிவித்துள்ளார்.

    மைக்கேல் வாகன் கணிப்பின்படி இன்றைய போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்த வேண்டும். வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும். இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இது நடக்குமா? என்பது போகபோகத்தான் தெரியும்.
    சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு உலகக்கோப்பையில் 500 ரன்கள் அடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஹிட்மேன் படைத்துள்ளார்.
    ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ள ரோகித் சர்மாவை ரசிகர்கள் செல்லமாக ‘ஹிட்மேன்’ என்று அழைத்து வருகின்றனர். ஹிட்மேன் இந்த உலகக்கோப்பையில் நம்பமுடியாத அளவிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    இன்றைய போட்டியிலும்  சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் நான்கு சதங்கள் விளாசியுள்ளனர்.

    ரோகித் சர்மா

    மேலும் இன்றைய போட்டியில் 96 ரன்கள் அடித்திருக்கும்போது 533 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் உலகக்கோப்பையில் 500 ரன்களை தாண்டியிருந்தார். அதன்பின் தற்போது ரோகித் சர்மா 500 ரன்களை தாண்டி சாதனைப் படைத்துள்ளார்.

    மேலும், இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். வார்னர் 516 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். 
    ×