search icon
என் மலர்tooltip icon

    அருணாசலப் பிரதேசம்

    • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மக்களவை தேர்தலுடன் வருகிற 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    அத்துடன் 60 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது, 27-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. 28-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்றுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி பா.ஜனதா முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் 10 பேரும் ஒருமனதாக எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    என்றபோதிலும் ஜூன் 4-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இட்டாநகர் மற்றும் டெச்சி கசோ தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிராமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முக்டோ, சவுக்காம், சகாலீ, தலி, தலிஹா, ரோய்ங், ஜிரோ-ஹபோலி, இட்டாநகர், மொம்திலா, ஹயுலியாங் ஆகிய தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் பா.ஜனதா வேட்பாளர்கள் ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பீமா கண்டு, சவ்னா மெய்ன் ஆகியோர் முறையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆவார்கள்.

    • அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • ஜூன் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிம்லா:

    இந்தியாவில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    பாராளுமன்ற தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அருணாச்சல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    • முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது.
    • 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள போட்டியாளர்களின் 2ம் கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

    இதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது. இது, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவாங் மாவட்டத்தின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று. 

    இந்த 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

    முன்னதாக 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 60 சட்டமன்றத் தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

     

    • அருணாசல பிரதேசத்தில் 1000 கிலோமீட்டர் எல்லைப் பகுதி சீனாவின் எல்லையைஒட்டி அமைந்துள்ளது.
    • இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இடாநகர்:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள கடைசி மாநிலமாக அருணாசல பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லைப்பகுதி சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

    அருணாசல பிரதேசத்தின் பெரும்பான்மையான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதற்கு பெயர்களையும் சூட்டி சீனா அடாவடி செய்துவருகிறது.

    அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,116 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதி சீனா, பூடான் எல்லையையொட்டியும் அமைந்து இருக்கிறது. தவாங்கில் இருந்து ஒட்டுமொத்த அருணாசல பிரதேசம் மற்றும் பூடான் திபெத்தையும் கண்காணிக்க முடியம்.

    இங்கு அமெரிக்காவின் நயாகராவுக்கு இணையான நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மிகவும் அழகிய இந்த நீர்வீழ்ச்சிகள் மிகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இதனால் தவாங் எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய சீனா முயற்சி செய்து வருகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு அத்துமீறிய சீன வீரர்களுக்கும், இந்திய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து சீன படையை விரட்டி அடித்தனர். இரு நாட்டு படைகளும் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பதற்றமான நிலை தான் நிலவி வருகிறது.

    அருணாசல பிரதேசத்தில் சில நேரங்களில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும். டீசல் கூட உறைந்து போகும் வகையில் பனி கொட்டும்.

    அதேசமயம் மழைப்பொழிவும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ராணுவ தளவாட பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்ல பல்வேறு பிரச்சனைகள் இருந்தது.

    இதையடுத்து சீனா எல்லையையொட்டி தவாங்-டிராங் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.825 கோடி மதிப்பிலான சேலா சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பெரும் சவால்களை கடந்து இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள். காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்-டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

    எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

    இந்தப் பணியில் 50 என்ஜினீயர்கள் மற்றும் 800 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த சுரங்கப்பாதை மூலம் இனி இந்திய வீரர்கள் எளிதாக சீனா எல்லைக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் பெரிய எந்திரங்களைக் கொண்டு செல்லலாம். இந்த வழியில் தினமும் 3 ஆயிரம் கார்கள் மற்றும் 2 ஆயிரம் லாரிகள் செல்லலாம்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அருணாசல பிரசேதத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை சிறந்த போக்குவரத்துக்கு மட்டுமல்ல, எல்லையைப் பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்நிலையில், அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் இடாநகரில் பிரமாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் 20 ஆண்டுகளில் செய்ததை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது என தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
    • முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

    பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

    • அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டம் பான்ஜிங் கிராமத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நில நடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது.

    அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டம் பான்ஜிங் கிராமத்தில் இன்று காலை சுமார் 8.50 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.0 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நில நடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    • விபத்து நடந்த பகுதியில் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

    இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை காவல் படையினர் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண்டாலாவின் கிழக்கே பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கபப்ட்டன. அதில் பயணித்த விமானிகள் விவிபி ரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

    • இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
    • விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    • போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார் என பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.
    • அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது என்றார்.

    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா போரை விரும்பாத நாடு. அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது.

    இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.

    போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

    எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.

    • அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்தியா முறியடித்தது.
    • கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இடாநகர்:

    இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

    கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
    • விமான நிலையம் இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.

    அருணாச்சல் பிரதேசம் மாநிலம் இட்டா நகரில் டோனி போலோ என்கிற புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    அருணாச்சல பிரதேசத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

    இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று புதிய பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த விமான நிலைய சேவை வடகிழக்கு மாநிலத்தின் தலைநகரை இணைக்கும். இது மாநில எல்லை மற்றும் மற்ற இந்திய நகரங்களுடன் வணிக விமானங்கள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் இணைக்கும்.

    இந்த விமான சேவை மூலம் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

    ×