என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அசாம்
- மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் ஜூலை 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு கவுகாத்தி ஐகோர்ட் தடை விதித்தது.
கவுகாத்தி:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தனர். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கடந்த 7-ம் தேதி சந்தித்த மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனித்து வரும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை அடுத்த மாதம் (ஜூலை) 11-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மித்தல் குமார் நியமிக்கப்பட்டார்.
இதற்காக அவருக்கு இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி கல்யாண் சவுபே முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் கவுகாத்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கவுகாத்தி ஐகோர்ட், ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
- 10 மாவட்டங்கள் கனமழைக்கு பாதிப்பு
- பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் இடிந்து சேதம்
அசாமில் கனமழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து இன்று வரை ரெட் அலார்ட், அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட், அதன்பின் வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சிராங், தராங், தெமாஜி, துப்ரி, திப்ருகார், கோக்ராஜ்ஹார், லகிம்புர், சோனிட்புர், உதால்கிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லகிம்புர் மாவட்டம்தான் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 22 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்னர். திப்ருகார் மாவட்டத்தில் 3800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் 25 இடங்களில் நிவாரம் வழங்கும் மையத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போது வரை நிவாரண முகாம் திறக்கப்படவில்லை.
கம்புரில் பிரம்மபுத்திராவின் கிளை நதியான கோபிலி அணையில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
- வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் இன்று காலை 10.16 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அண்டை நாடான வங்காளதேசத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தால் உயிர்சேதமோ? பொருட் சேதமோ? எதுவும் ஏற்படவில்லை.
- சரணாலயத்தில் இருந்து ஒரு யானை தனியாக வெளியேறி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.
- பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகளை எடுத்து சாப்பிட்ட யானையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அம்சாங் வன விலங்கு சரணாலயத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. இந்த சரணாலயத்தில் இருந்து ஒரு யானை தனியாக வெளியேறி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.
பின்னர் அந்த யானை சத்கான் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகளை எடுத்து சாப்பிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வீடியோக்களை பார்த்து ரசித்த இணைய பயனர்கள் ஜம்போ தனது இனிமையான பசியை தீர்த்துக் கொண்டது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
An #elephant came out of Amchang Wildlife Sanctuary to have sweets at a local shop in the Satgaon area of #Guwahati. #Viralvideo pic.twitter.com/uskNHgzjK7
— Zaitra (@Zaitra6) June 13, 2023
- பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி, அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக சென்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
- இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரெயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
இதில், 20 பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரெயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 அக பதிவானது. இன்று காலை 8 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. டிக்லிபூருக்கு கிழக்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.
- அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவில் சாலை விபத்து நடந்தது.
- பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இறந்த 7 பேருமே மாணவர்கள் ஆவர்.
விபத்தில் பலியான மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது.
- இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்தது.
இந்நிலையில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான அந்த பைப் லைனில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
தண்ணீர் பாய்ந்த வேகத்தில் சிக்கிய 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். தண்ணீரின் வேகத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீணாக கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தினர்.
குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பால் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.
- கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாமின் கவுகாத்திக்கு வருகை தர உள்ளதால், அம்மாநில தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அங்கு அசாம் அரசு பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கிட்டத்தட்ட 45,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கப்படுகிறது.
ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருக்கும் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், "வெற்றி பெற்ற 44,703 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார். அதே நாளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்" என்றார்.
மாநில அரசின் 22765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.
- இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என அசாம் முதல் மந்திரி தெரிவித்தார்.
- இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி ராணுவத்தினர் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதுடன் யாரையும் வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.
இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், மக்களின் கோரிக்கையின்படி மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இந்தாண்டு நவம்பர் இறுதிக்குள் திரும்ப பெறப்படும். மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு பதிலாக அசாம் போலீஸ் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளும் இருப்பார்கள் என தெரிவித்தார்.
- ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.
அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்