search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல். திருவிழா 2024

    சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
    X

    கோப்புப்படம்

    சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

    • சேப்பாக்கத்தை சுற்றியுள்ள ஓட்டல்களிலும் நாளை இரவு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட உள்ளது.
    • நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகத்தினரும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பபட்டுள்ளது.

    நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறுதிப் போட்டியை காண கொல்கத்தா, ஐதராபாத் அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.

    இதை தொடர்ந்து லாட்ஜ்களில் வழக்கமான கட்டணத்தைவிட 10 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் உள்ள உணவகங்களும் வழக்கத்தை விட அதிகமாக உணவுகளை சமைப்பதற்கு தயாராகி வருகின்றன.

    இறுதிப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்பதால் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மைதானத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். போட்டி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பவர்களை பிடிக்கவும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    கூடுதல் விலைக்கு விற்பவர்களை பிடிக்கவும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். இறுதிப் போட்டியை காண்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து பலர் விமானத்தில் வந்துள்ளனர்.

    இதையொட்டி டெல்லி, சென்னைக்கான விமான கட்டணம் 15 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமான நாட்களில் ரூ.7 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    சென்னை ரசிகர்களும் மைதானத்துக்கு சென்று இறுதிப்போட்டியை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். இரவில் இறுதிப்போட்டி முடிந்த பிறகு திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சாப்பிடுவது வழக்கம். இதனால் சேப்பாக்கத்தை சுற்றியுள்ள ஓட்டல்களிலும் நாளை இரவு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட உள்ளது. நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகத்தினரும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால் சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் சமையல் கலைஞர்கள் படுபிசியாக காணப்படுகின்றனர். சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாது காப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×