search icon
என் மலர்tooltip icon
    < Back
    Bayamariya Brammai
    Bayamariya Brammai

    பயமறியா பிரம்மை

    இயக்குனர்: ராகுல் கபாலி
    எடிட்டர்:அகில் பிரகாஷ்
    இசை:கே
    வெளியீட்டு தேதி:2024-06-21
    Points:204

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை228218
    Point102102
    கரு

    பலக்கொலைகளை செய்த குற்றவாளி பற்றிய கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ் 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்திருக்கிறார். அவர் கொலை செய்வதை கலையாக பார்க்கும் ஒரு நபர். இவரின் வாழ்க்கை மற்றும் கொலைகளை பற்றி கேட்டறிந்து அதை புத்தகமாக வெளியிட சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வினோத் சாகர் இவரை சந்திக்க வருகிறார்.

    ஜெகதீஷ் தான் கொலை செய்த அனுபவத்தையும், முதல் கொலையை எப்படி செய்தேன் என்பதை விவரிக்கிறார்.முதல் கொலையில் மட்டும் நிக்காமல் அடுத்தடுத்து கொலைகளில் ஈடுபடுகிறார் ஜெகதீஷ்.  இந்த கொலை மனப்பான்மை எதனால் இவருக்கு வருகிறது? இதனால் இவரின் குடும்பம் என்ன நிலையானது? எழுத்தாளர் வினோத் சாகர் , ஜெகதீஷின் வாழ்க்கையை எவ்வாறு புரிந்துக் கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    அறிமுக நாயகனான ஜேடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பு அறிமுக நாயகன் என்ற உணர்வை கடத்தவே இல்லை. குரு சோமசுந்திரம் மற்றும் ஹரிஷ் உத்தமன் கொடுத்த வேலையை நன்கு அறிந்து நடித்துள்ளனர். ஜான் விஜய், வினோத் சாகர், விஸ்வாந்த், திவ்யா கணேஷ், கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    கொலையை கலையாக நினைத்து செய்யும் ஒரு குற்றவாளியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்கிருக்கிறார் இயக்குனர் ராகுல் கபாலி. படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமான பாணியில் இயக்கி இருக்கி இருந்தாலும்  படம் பார்க்கும் பெரும்பாலான மக்களுக்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. சொல்லும் கதையை இன்னும் தெளிவாக கூறியிருந்தால் திரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

    இசை

    இசையமைப்பாளர் கே- வின் இசை கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    நந்தாவின் ஒளிப்பதிவு தெளிவில்லை, பெரும்பாலான காட்சிகள் இருட்டில் நடப்பதால் அதை தெளிவாக காட்சியமைக்க தவறவிட்டிருக்கிறார்.

    தயாரிப்பு

    69MM பிலிம் நிறுவனம் பயமறியா பிரம்மை படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×