search icon
என் மலர்tooltip icon
    < Back
    Blue Star
    Blue Star

    ப்ளூ ஸ்டார்

    இயக்குனர்: ஜெயக்குமார் எஸ்
    எடிட்டர்:செல்வா ஆர்கே
    இசை:கோவிந்த் வசந்தா
    வெளியீட்டு தேதி:2024-01-25
    Points:7111

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை524235363636
    Point18452942166848713534
    கரு

    கிரிக்கெட் விளையாட துடிக்கும் இரண்டு இளைஞர்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    அரக்கோணம் பகுதியில் வாழ்ந்துவரும் அசோக் செல்வனும் சாந்தனுவும் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் அணிக்கு கேப்டனாகவும் ஷாந்தனு ஆல்பா அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்கள். போட்டி என்று வரும் போது பல அணியுடன் மோதும் இருவரும் முன் பகை மற்றும் இரண்டும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.

    இந்நிலையில் கோவில் திருவிழாவில் இரு அணியினரும் விளையாட முன் வருகிறார்கள். அந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக சாந்தனு பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர்.

    மகிழ்ச்சியில் இருக்கும் சதான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவரைக் கடுமையாக அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். இதை பார்க்கும் அசோக் செல்வன், சாந்தனுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார்.

    ஒருகட்டத்தில் ப்ளூஸ்டார் அணியும் ஆல்பா அணியும் ஓர் அணியாக மாறுகிறது. இறுதியில் இருவரும் சேர்ந்து எதிர் அணியை எப்படி எதிர் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இந்த படமும் சிறப்பாக அமைந்து இருக்கிறது. கிராம பின்னணி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாந்தனுவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது இருக்கிறது. இருவரும் சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்கள்.

    அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டிருப்பதும் 'ரயிலின் ஒலிகள்'பாடலும் ரசிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    விளையாட்டை மையமாக வைத்து இரு சமூகத்தின் வேற்றுமை ஒற்றுமையை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். ஒரு சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் நகர்ந்து இருக்கிறது. வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கிறது. அனைவரும் சமம் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியதற்கு பாராட்டுகள்.

    இசை

    கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    ஒளிப்பதிவு

    தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவு சிறப்பு. முக்கியமாக இவரது ஒளிப்பதிவில் அரக்கோணம் ரயில் நிலையம், ரயில் செல்லும் காட்சிகள், கிரிக்கெட் ஆட்டங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.

    படத்தொகுப்பு

    செல்வா ஆர்.கே. படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.

    காஸ்டியூம்

    ஏகன் ஏகாம்பரம் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து 'ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-02-14 08:10:32.0
    Manoj Kumar

    ×