search icon
என் மலர்tooltip icon
    < Back
    Creation of the Gods 1: Kingdom of Storms
    Creation of the Gods 1: Kingdom of Storms

    கிரியேஷன் ஆஃப் தி காட்ஸ்: கிங்டம் ஆஃப் ஸ்ட்ரோம்ஸ்

    இயக்குனர்: வ்யர்சான்
    வெளியீட்டு தேதி:2024-06-21
    Points:4

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை421
    Point4
    கரு

    அழிக்கப்பட்ட சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    கிரியேஷன் ஆஃப் தி காட்ஸ்: கிங்டம் ஆஃப் ஸ்ட்ரோம்ஸ் 16 ஆம் நூற்றாண்டில் சீன புராண இதிகாசத்தை அடிப்படையான கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம். கிங் ஸூ , ஜிசவ் என்ற நகரத்தை ஜி பா உதவியுடன் படயெடுக்க தயாராகிறார். அவரது பரம்பரை எதிரியான ஸு ஹுவை அழிப்பதே இவர்களது திட்டம், இவர்கள் படையெடுத்து மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கின்றனர், ஆனால் இவர்கள் ஸூ ஹுவின் மகளான ஸூ தாஜியை கொல்ல வேண்டாம் என நினைத்து அவர்களுடன் அழைத்து செல்கின்றனர்.

    பிறகு தான் தெரிய வருகிறது ஸு தாஜி ஒரு மனித உருவத்தில் இருக்கும் வேற்று சக்தி படைத்த ஒருவர் என்று. ஸூ தாஜி , கிங் ஸூவிற்கு அவளது சக்திகளை வைத்து சில நன்மைகளை செய்கிறார் இதனால் கிங் ஸூவிற்கு ஸூ தாஜி  நம்பிக்கைக்குரிய நபராக மாறுகிறார். தற்பொழுது கிங் ஸூ வின் அப்பா கொள்ள படுவதால் அடுத்த அந்த ராஜியத்திற்கு யார் தலைமை தாங்க போகிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இப்பொழுது இச்சூழ்நிலையை சமாளிக்க தேவ உலகத்தில் இருந்து மூன்று சிரஞ்சீவிக்கள் அனுப்பப்படுகிறார்கள் அடுத்த ராஜாவை தேர்ந்தெடுக்க. அடுத்ததாக கிங் ஸூவிற்கு  தலைமை பொறுப்பை கொடுத்திடலாம் என்று செல்கையில் அவர் அதற்கு தகுதியில்லை என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வருகிறது. அடுத்து என்ன நடந்தது? எதனால கிங் ஸூவிற்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படவில்லை? அந்த சாம்ராஜியத்திற்கு அடுத்து அரசனாகபோவது யார்? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் கதாநாயகனான போ ஹுவாங் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிறிஸ் பிலிப்ஸ் மற்றும் லீ கொடுத்த வேலையை திறபம்பட செய்துள்ளனர்.

    இயக்கம்

    16 ஆம் நூற்றாண்டில் நடைப்பெற்ற புராண இதிகாசத்தை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் உயர்ஷான். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் நீள அளவை குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். படத்தில் கிராபிக் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது படத்திற்கு பலம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கதை சில இடத்தில் நகராமல் தேங்கி நிற்பது படத்திற்கு பலவீனம்.

    ஒளிப்பதிவு

    படத்தை மிக நுட்பமாகவும், பிரம்மாண்டமாக காட்சி படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் வாங் யூ

    இசை

    கார்டி ஹாப்பில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    ஸாங் போ இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×