search icon
என் மலர்tooltip icon
    < Back
    Ezhu Kadal Thaandi Side B
    Ezhu Kadal Thaandi Side B

    ஏழு கடல் தாண்டி Side B

    இயக்குனர்: ஹேமந்த் எம் ராவ்
    ஒளிப்பதிவாளர்:அத்வைதா குருமூர்த்தி
    இசை:சரண் ராஜ்
    வெளியீட்டு தேதி:2023-11-17
    Points:871

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை147140
    Point376495
    கரு

    காதலுக்காக எதையும் செய்ய துடிக்கும் காதலன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பெரிய கோடீஸ்வரர் அவினாஸ் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் ரக்‌ஷித் ஷெட்டி. ஒரு நாள் அவினாஷ் மகன் கார் விபத்து ஏற்படுத்திவிடுகிறார். இதில் ஒருவர் உயிரிழக்கிறார். இந்த பழியை ரக்‌ஷித் ஷெட்டி ஏற்று சிறைக்கு செல்கிறார். அவரை காப்பாற்றுவதாக கூறிவிட்டு அவினாஸ் குடும்பம் ஏமாற்றி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், ரக்‌ஷித்தின் காதலி ருக்மணியும் அவரை ஏமாற்றி விடுகிறார். 10 வருடங்கள் முடிந்து ரக்‌ஷித் சிறையில் இருந்து விடுதலையாவதோடு முதல் பாகம் முடிகிறது.

    இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த ரக்‌ஷித்திற்கு அவரது நண்பர் வேலை வாங்கி கொடுத்து பார்த்துக் கொள்கிறார். அடிக்கடி ரெட் லைட் ஏரியாவிற்கு செல்லும் ரக்‌ஷித்திற்கு அங்குள்ள ஒரு பெண்ணை பிடித்துவிடுகிறது. இவருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள்.

    ஒருநாள் ரக்‌ஷித் தன் முன்னாள் காதலி ருக்மணியை சந்திக்கிறார். அவர் மிகவும் கஷ்டப்படுகிறார் என்பது தெரிந்ததும் அவருக்கு உதவ முயல்கிறார்.

    இறுதியில் ரக்‌ஷித் ஷெட்டி தன் முன்னாள் காதலி ருக்மணியின் கஷ்டத்தை போக்கினாரா? அவரின் தற்போதைய காதலி நிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ரக்‌ஷித் ஷெட்டி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். காதலியை பார்க்க துடிக்கும் காட்சிகளில் அடுத்து என்ன நடக்க போகுதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தன் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

    முன்னாள் காதலியாக வரும் ருக்மணி வசந்த் முதல் பாகத்தில் கொடுத்த நடிப்பை இந்த பாகத்தில் ஈடுகட்ட தவறிவிட்டார். கணவன், குழந்தை, வறுமை என தன் நடிப்பை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட்டார். பாலியல் தொழிலாளியாக வரும் சைத்ரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

    இயக்கம்

    காதலை மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹேமந்த் எம் ராவ். ஒரு காதலன் தன் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை திரைக்கதை மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

    இசை

    சரண் ராஜ் தன் பின்னணி இசை மூலம் காதலின் வலியையும் வேதனையும் ரசிகர்களுக்கு கடத்துகிறார்.

    ஒளிப்பதிவு

    அத்வைதா குருமூர்த்தி கதைக்கேற்ற ஒளிப்பதிவை செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ‘ஏழு கடல் தாண்டி Side B' திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-11-24 16:39:49.0
    Hameed

    Super movie

    ×