என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஹரா
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 111 | 108 | 114 |
Point | 546 | 769 | 66 |
மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடும் தந்தையின் கதை.
கதைக்களம்
ஊட்டியில் நாயகன் மோகன், மனைவி அனுமோல் மகள் ஸ்வாதி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். மகள் ஸ்வாதி மீது அதிக அன்போடு இருக்கிறார் மோகன். கல்லூரியில் படித்து வரும் ஸ்வாதி, ஒரு நாள் இரவு மோகனுக்கு போன் செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
மனவேதனை படும் மோகன், மகள் இறப்புக்கான காரணத்தை தேடுகிறார். இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்கள் மோகனுக்கு கிடைக்கிறது.
இறுதியில் தன் மகள் ஸ்வாதி இறப்புக்கான காரணத்தை மோகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? ஸ்வாதிக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மோகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி அசத்தி இருக்கிறார். இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. குறிப்பாக மகளுக்காக ஏங்கும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். மனைவியாக வரும் அனுமோல் மகளை இழந்து தவிக்கும் தாயாக நடித்து உருகவைத்து இருக்கிறார்.
மகளாக வரும் ஸ்வாதி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். மோகனுக்கு உதவியாக வரும் அனிதா நாயர் நடிப்பை விட ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கவுஷிக் ராமும் சந்தோஷ் பிரபாகரனுக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இயக்கம்
மகள் மரணத்திற்கு காரணமானவர்களை தேடி பழிவாங்கும் தந்தையின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி. ஆனால், திரைக்கதை போலி மருந்து, கலப்படம் மருந்து என்று திசை மாறி செல்கிறது. இயக்குனர் கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் மேனன், மைம் கோபி, வனிதா விஜயகுமார், சிங்கம் புலி ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பை வீணடித்து இருக்கிறார். மனதில் எந்த காட்சியும் பதியாதது வருத்தம்.
இசை
ரசாந்த் அர்வின் இசையில் தந்தை மகள் பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிக்கு ஏற்றவாறு பயணித்து இருந்தாலும், ஒரு சில இடங்களில் இரைச்சல் ஆன இசையை கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பிரகாத் முனுசாமி மனோ தினகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி ஆகியோரின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
தயாரிப்பு
கோவை எஸ் பி மோகன்ராஜ் `ஹரா’ திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்