search icon
என் மலர்tooltip icon
    < Back
    HMM - Hug Me More
    HMM - Hug Me More

    HMM - ஹக் மீ மோர்

    இயக்குனர்: நரசிம்மன் பக்கிரிசாமி
    வெளியீட்டு தேதி:2024-09-20
    Points:56

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை330297
    Point2432
    கரு

    செயற்கைக்கோள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஒருவரின் மர்ம கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி செயற்கைகோள்களை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த ஆராய்ச்சியில் இவரது நண்பர் உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். மேலும் தனது காதலி சுமிராவும் இவர்களுடன் தங்கி வருகிறார். இவர்கள் அனைவரும் மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    ஒருநாள் தனது வேலை காரணமாக நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி வெளியூர் செல்கிறார். அதன்பின் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர், வீட்டிற்கு வந்து சுமிராவின் தோழியை கொடூரமாக கொலை செய்கிறார். மேலும், சுமிராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

    இறுதியில் முகமூடி அணிந்த நபர், சுமிராவை கொலை செய்தாரா? சுமிரா தப்பித்தாரா? முகமூடி கொலைகாரன் யார்? எதற்காக அவர் சுமிராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்? வெளியே சென்ற நரசிம்மன் பக்கிரிசாமி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நரசிம்மன் பக்கிரிசாமி, கதை எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார். மிக எளிமையான கதையை, மிக மிக எளிமையான முறையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து ஒரு படமாக கொடுத்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் சுமிரா,  புதுமுகம் என்பதால் அவரிடம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடுவது, அவரை கொலை செய்ய முயற்சி செய்வது என கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    நாயகியின் தோழியாக நடித்த பெண் மற்றும் அவரது காதலர், நாயகனின் நண்பர் ஆகியோர் ஓரளவிற்கு நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு வீடு, நான்கு நடிகர்கள் மட்டுமே வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நரசிம்மன் பக்கிரிசாமி. இவரது முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், சொல்லவந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் சொதப்பி இருக்கிறார். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம். ஒரே காட்சியை அடுத்தடுத்து ரிபீட்டாக வைத்து இருக்கிறார் எடிட்டர் துரைராஜ் கருப்பசாமி.

    ஒளிப்பதிவு

    கிரணின் ஒளிப்பதிவு வெளிச்சம் இல்லாமல் இருட்டிலேயே பயணித்து இருக்கிறது.

    இசை 

    புரூஸ் மற்றும் ஷியாமளா தேவியின் இசை அதிகம் எடுபடவில்லை.

    தயாரிப்பு

    பிரைட் எண்டர்டெயின்மண்ட் டைம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×