search icon
என் மலர்tooltip icon
    < Back
    Merry Christmas
    Merry Christmas

    மெரி கிறிஸ்துமஸ்

    இயக்குனர்: ஸ்ரீராம் ராகவன்
    எடிட்டர்:பூஜா லதா சுர்தி
    ஒளிப்பதிவாளர்:மது நீலகண்டன்
    இசை:ப்ரீதம் சக்ரவர்த்தி
    வெளியீட்டு தேதி:2024-01-12
    Points:1428

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை143112797975
    Point403703276388
    கரு

    மர்மமாக நடந்த கொலையின் விசாரணை தொடர்பான கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நீண்ட நாட்களுக்கு பிறகு துபாயில் இருந்து மும்பைக்கு விஜய் சேதுபதி வருகிறார். அன்று இரவு வெளியே ஓட்டல் ஒன்றுக்கு செல்கிறார். அப்போது ஒருவர் விஜய் சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் அதை கத்ரீனாவிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். விஜய் சேதுபதியும் அவரிடம் இந்த விஷயத்தை சொல்கிறார்.

    முதல் சந்திப்பிலேயே விஜய்சேதுபதிக்கு கத்ரீனாவை பிடித்துபோய் விடுகிறது. இதையடுத்து விஜய் சேதுபதி அவரை பின் தொடர்கிறார். இருவரும் அந்த ஒரு இரவில் நண்பர்களாகி நெருக்கமாக பழகுகின்றனர். அப்போது கத்ரீனா தன் குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய்சேதுபதியுடன் வெளியே செல்கிறார். இருவரும் சந்தோஷமாக அன்றிரவு கழித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கத்ரீனாவின் கணவர் இறந்த நிலையில் கிடக்கிறார்.

    இறுதியில் கத்ரீனாவின் கணவரை கொன்றது யார்? இந்த கொலை எதற்காக நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    விஜய் சேதுபதி எப்போதும் போல் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிக்க வைத்துள்ளார். கதாநாயகியான கத்ரீனா கைஃப் தாயாகவும் காதலியாகவும் கவர்கிறார். திரையில் அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் செய்து ஒரு முழுமையான தமிழ் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.

    போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    இயக்கம்

    ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை கிரைம் த்ரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். யார் கொலை செய்தார்கள் என யூகிக்க முடியாதவாறு காட்சிகளை இயக்கியுள்ளார். முதல் பாதி சற்று மொதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் மிரட்டியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சியை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

    இசை

    கிரைம் த்ரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் இசையமைத்துள்ளார் ப்ரீதம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    மது நீலகண்டன் ஒளிப்பதிவு கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.

    படத்தொகுப்பு

    பூஜா லதா சுர்தி படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.

    காஸ்டியூம்

    அனிதா ஷ்ராஃப் அடாஜானியா மற்றும் சபீனா ஹல்தார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளனர்.

    புரொடக்‌ஷன்

    டிப்ஸ் பிலிம்ஸ் லிட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×