search icon
என் மலர்tooltip icon
    < Back
    Miss Shetty Mr Polishetty
    Miss Shetty Mr Polishetty

    மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி

    இயக்குனர்: மகேஷ் பாபு
    எடிட்டர்:கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
    ஒளிப்பதிவாளர்:நீரவ் ஷா
    இசை:ரதான்
    வெளியீட்டு தேதி:2023-09-07
    Points:594

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை20616611196
    Point1783356813
    கரு

    திருமணம் செய்யாமல் குழந்தை பெற நினைக்கும் பெண் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகி அனுஷ்கா வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக இருக்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அனுஷ்கா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.

    இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அனுஷ்கா தன் தாயுடன் சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் தாய் ஜெயசுதா இறந்து விடுகிறார். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அனுஷ்கா, திருமணம் செய்துகொள்ளாமல் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    இதற்காக விந்து டோனர் ஒருவரை தேடுகிறார். இந்நிலையில், நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கும் அனுஷ்கா, அவரை ஏமாற்றி விந்து டோனர் வாங்க முயற்சி செய்கிறார்.

    இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, அழகாக நடித்து இருக்கிறார். தாய் இறந்த பின் சோகம், நவீன் பொலிஷெட்டியை பற்றி தெரிந்து கொள்ளும் முயற்சியில் யதார்த்தமாக நடித்து பளிச்சிடுகிறார்.

    நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார். அனுஷ்காவை காதலிப்பது, உண்மை தெரிந்தவுடன் கோபப்படுவது, வருந்துவது என கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் காமெடியால் கலக்கி இருக்கிறார்.

    இயக்குனர்

    காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி கலகலப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

    இசை

    ரதன் இசையில் ஒரு சில பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசை ஓகே.

    ஒளிப்பதிவு

    நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு சிறப்பு.

    புரொடக்‌ஷன்

    யுவி கிரியேஷன் தயாரிப்பில் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ வெற்றி படமாக அமைந்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×