search icon
என் மலர்tooltip icon
    < Back
    வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்: Venom: The Last Dance Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்: Venom: The Last Dance Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    வெனம்: தி லாஸ்ட் டேன்ஸ்

    இயக்குனர்: கெல்லி மார்செல்
    எடிட்டர்:மார்க் சாங்கர்
    ஒளிப்பதிவாளர்:ஃபேபியன் வாக்னர்
    இசை:டான் டீகன்
    வெளியீட்டு தேதி:2024-10-24
    Points:4709

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை4548138
    Point1982270324
    கரு

    கோட் எக்ஸ்-ஐ எடுக்க போராடும் ஏலியனிடமிருந்து தப்பிக்கும் எடி மற்றும் வெனமின் கதை

    விமர்சனம்

    கதைக்களம்

    டாம் ஹார்டியுடன் வெனம் இருக்கிறது. வெனம் ஒரு சிம்பயான் இனத்தை சேர்ந்த வேறொரு கிரகத்தை சேர்ந்த உயிரினமாகும். அந்த மேலோகத்தில் இருக்கும் உயிரனங்கள் எப்படியாவது இந்த உலகத்திற்கு வரவேண்டும் என துடிக்கின்றன. அந்த ஜீவராசிகள் பூமிக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு code X தேவை. அந்த கீ கோட் எக்ஸ் கதாநாயகன் மற்றும் வெனம் முழுமையாக ஒன்று சேர்ந்தால் மட்டுமே கிடைக்க கூடியவையாகும்.

    இந்த கீயை எடுக்க வேற்று கிரகத்தில் இருந்து இரண்டு ஏலியங்களை அனுப்பபடுகின்றனர். இந்த ஏலியன்களை சாகடிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். மறுப்பக்கம் வெனமை டாம் ஹார்டியிடமிருந்து  பிரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இராணுவப்படை இவர்களை துரத்துகிறது. மேலோக ஏலியன் மற்றும் இராணுவப்படை இடையே சிக்கிக் கொள்ளும் இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?. ஏலியன் அடையவந்த கோட் எக்ஸை அடைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனான டாம் ஹார்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். மற்ற கதாப்பாத்திரங்கள் கொடுத்த வேலையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    கெல்லி மார்சல் இப்பாகத்தை இயக்கியுள்ளார். திரைக்கதையை அமைத்த விதம் பாராட்டுக்குறியவை. கதாநாயகனுக்கும் வெனமிற்கும் உள்ள எமோஷனல் காட்சிகள் சிறப்பாக பார்வையாளர்களிடையே வொர்க் அவுட் ஆகியுள்ளது. திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒட்டி வரக்கூடிய ஆக்‌ஷன் காட்சிகள். வெனாம் சோல்டர்ஸ் வருவது என மிரட்டியுள்ளார். படத்தின் நீலம் படத்திற்கு பெரியபலம்.

    ஒளிப்பதிவு & கிராபிக்ஸ்

    படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை திறம்பட படக்குசு செய்துள்ளனர். எந்த ஒரு காட்சியிலும் பிசிரு தட்டவில்லை. படத்தின் ஒளிப்பதிவை சிறப்பாக மேற்கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ஃபேபியன் வாக்நர்

    இசை

    டேன் டீகானின் இசை படத்திற்கு பெரிய பலம். திரைக்கதை வேகத்திற்கு பெரிதும் உதவி செய்துள்ளது.

    தயாரிப்பு

    சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×