search icon
என் மலர்tooltip icon
    < Back
    Viduthalai Part - 1
    Viduthalai Part - 1

    விடுதலை

    இயக்குனர்: வெற்றிமாறன்
    எடிட்டர்:ராமர் .ஆர்
    ஒளிப்பதிவாளர்:ஆர்.வேல்ராஜ்
    இசை:இளையராஜா
    வெளியீட்டு தேதி:2023-03-31
    Points:6436

    ட்ரெண்ட்

    வாரம்12345678
    தரவரிசை1965605150373323
    Point35731773725249703394
    கரு

    மக்களின் போராளியாக செயல்படும் நபரை தேடும் போலீஸ் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    மலையை அழித்து தொழிற்சாலை அமைக்க வெளிநாட்டு சுரங்க நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால் அந்நிறுவனத்துக்கு எதிராக அந்த கிராம மக்கள் போராடத் தொடங்குகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்கள் ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு ரயில் மீது வெடிகுண்டு வீசியது.

    இதையடுத்து தமிழக காவல்துறை மலைப்பகுதியில் முகாம் அமைத்து மக்கள் ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது. சூரி அடர்ந்த காட்டில் உள்ள முகாமுக்கு பணியின் பேரில் வருகிறார். இந்த மக்கள் புரட்சியை தடுத்து நிறுத்தவும் அதற்கு தலைமை தாங்கும் மக்கள் போராளி விஜய் சேதுபதியை பிடிக்கவும் ‘ஆபரேஷன் கோஸ்ட் ஹன்ட்’ என்ற வேட்டையை ஆரம்பிக்கிறது போலீஸ்.

    மக்கள் போராளியாக இருக்கும் விஜய் சேதுபதியை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்ட, அப்பொழுது அந்த மக்களை போலீஸ் சித்ரவதை செய்கிறது. மறுபுறம் கடைநிலை போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூரி, இந்த மக்களை துன்புறுத்தும் போலீசை எதிர்த்தும், தேடப்படும் நபரை போலீசாக பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் காட்டுகிறார். இதனால் உயர் அதிகாரியுடன் சூரிக்கு மோதல் ஏற்படுகிறது. மறுபுறம் அந்த கிராமத்தில் வசிக்கும் பவானி ஸ்ரீயுடன் நெருக்கம் ஏற்படுகிறது.

    இறுதியில் போலீஸ் விஜய் சேதுபதியை கண்டுபிடித்தார்களா? மக்களை துன்புறுத்தும் போலீசை விஜய் சேதுபதி எப்படி தடுத்தார்? சூரி தான் நினைத்ததில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    மக்கள் போராளியாக வரும் விஜய் சேதுபதி, எதார்த்த நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார். மக்களின் பிரச்சனைகளை அவரின் உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். அப்பாவி போலீசாக வரும் சூரி படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார்.

    போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்கிறது. பவானி ஸ்ரீயின் அழகான நடிப்பு பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. மேலும் ராஜிவ் மேனன், தமிழ், மூணார் ரமேஷ், இளவரசு, சரவண சுப்பையா உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.


    இயக்கம்

    சுபாபனின் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை படத்தை இயக்கி தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரைக்கதைக்கு ஏற்ப அழகாக வடிவமைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரபரப்பான திரைக்கதையையும், அடுத்து என்ன என்ற தேடலையும் கையாண்டிருக்கிறார்.


    இசை

    இளையராஜாவின் பின்னணி இசை அற்புதம். படம் முடிந்த பிறகும் பாடல்கள் உங்களை முனக வைக்கின்றன.


    ஒளிப்பதிவு

    வேல்ராஜின் ஒளிப்பதிவு அபாரம். காட்டில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கையோடு சேர்த்து அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


    படத்தொகுப்பு

    ஆர்.ராமர் படத்தொகுப்பு சூப்பர்

    சவுண்ட் எபெக்ட்

    பிரதாப் சவுண்ட் எபெக்ட்டில் கலக்கியிருக்கிறார்.

    புரொடக்‌ஷன்

    ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் ’விடுதலை’ திரைப்படம் தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-11-28 08:58:58.0
    Mathana

    super

    ×