என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விருந்து
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 184 | 214 |
Point | 242 | 163 |
கதைக்களம்
நாயகி நிக்கி கல்ராணியின் தந்தை பெரிய தொழில் அதிபர். இவரது தொழில் நஷ்டத்தில் இருந்து மீளும் நிலையில் மர்மமான முறையில் இறக்கிறார். இவரது மரணம் கொலை என்று போலீஸ் விசாரித்து வருகிறது. சில நாட்களில் நிக்கி கல்ராணியின் தாயும் விபத்தில் சிக்கி இறக்கிறார்.
அதன் பின் மர்ம கும்பல் ஒன்று நிக்கி கல்ராணியை துரத்த ஆரம்பிக்கிறது. அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி தன் வீட்டில் தங்க வைக்கிறார் அர்ஜூன். ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணி, அர்ஜூனை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இறுதியில் நிக்கி கல்ராணியை துரத்தும் மர்ம கும்பல் யார்? எதற்காக துரத்துகிறார்கள்? அர்ஜூன் யார்? நிக்கி கல்ராணி, அர்ஜூனை கொலை செய்ய முயற்சி செய்வது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்திருக்கிறார். ஆக்ஷன், கொலையின் பின்னணியை தேடுதல் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் பயணிக்கும் கிரிஷ் நெய்யர் எதார்த்த நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இயக்கம்
அடுத்தடுத்து கொலைகள், இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் . முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை வேறு எங்கோ சென்று இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு எடுத்திருக்கிறார். ஆனால் அது பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
இசை
ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் இசையில் ஒரு பாடல் கேட்கும் விதத்திலும், பின்னணி இசை மிரட்டலாகவும் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு கவனம் பெற்று இருக்கிறது.
தயாரிப்பு
நெய்யர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.