என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
- இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் கன்னிகை என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரித்விகாவும் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கருபழனியப்பனும் மதுரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஜெசியும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் போஸ்டர்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Introducing@Riythvika as Kannigai @karupalaniappan as Arumugam #Mathura as Jessie #YaadhumOoreYaavarumKelir releasing in 2⃣ days. Bookings Open now.
— VijaySethupathi (@VijaySethuOffl) May 17, 2023
Trailer ▶️ https://t.co/vSP1DCXoMq#YOYKfromMay19@ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @SakthiFilmFctry… pic.twitter.com/cumNSnxvIx
- தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன்.
- இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
போர் தொழில் போஸ்டர்
அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
My Next film..
— Ashok Selvan (@AshokSelvan) May 16, 2023
something thrilling on your way!
@ApplauseSocial #E4Experiments @epriusstudio @nairsameer @deepaksegal @e4echennai @cvsarathi @vigneshraja89@realsarathkumar @ashokselvan @nikhilavimal1 @imalfredprakash @prasoon_garg @SakthiFilmFctry pic.twitter.com/p64gHLYE5N
- விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
- இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பிச்சைக்காரனான யோகிபாபு க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிரிமினல்’.
- இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.
கிரிமினல் படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Dubbing from today ?#Criminal@realsarathkumar @SamCSmusic@Dhaksina_MRamar @prasannadop @eforeditor@parsapictures @BigPrintoffl @DoneChannel1@Theni_Gopi pic.twitter.com/2uHct87LO8
— Gautham Karthik (@Gautham_Karthik) May 15, 2023
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்'.
- இப்படம் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
அவதார் தி வே ஆப் வாட்டர்
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
அவதார் தி வே ஆப் வாட்டர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் வருகிற ஜுன் 7-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" .
- கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார்.
ஜூன், மதுரம் படங்களை இயக்கிய இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" . பர்ஸ்ட் பிரிண்ட் ஸ்டுடியோஸ் (First Print Studios) சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ள இந்த வெப்தொடரில் லால், அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார். மேலும், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த வெப்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்தொடர் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
"கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" வெப்தொடர் மலையாளத்தின் முதல் வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய்
இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது படத்தை 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கு முன்பு இப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது. யார் இயக்கினாலும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நடிகர் ஜீவா தயாரிப்பார் எனவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்யுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'அவ கண்ண பாத்தா' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் வடிவில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் லைகா.
- இந்த நிறுவனம் தற்போது ’தாம் தூம் தையா’ ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் 'தாம் தூம் தையா' என்ற புதிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜே கே, ஸ்ரியா, நாராயணன் பரசுராம், ஷாய்ஷா அகர்வால் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலை ஜிமிங் ஜி இயக்கியுள்ளார். மேலும், இந்த பாடலுக்கு ஜேகே இசையமைத்து வரிகள் எழுதியுள்ளார். வித்தியாசமாக இரண்டு மொழிகள் கலந்து உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- இராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.
தல வரலாறு
இராமன் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.இராவணனை கொன்ற பாவத்தினை நீக்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு இராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
கோவில் அமைப்பு
தென்னிந்திய கோவில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3,850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.
திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்:
வ.எண் தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம்
8 நள தீர்த்தம்
9 நீல தீர்த்தம்
10 கவய தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம்
12 கெந்தமாதன தீர்த்தம்
13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14 கங்கா தீர்த்தம்
15 யமுனா தீர்த்தம்
16 கயா தீர்த்தம்
17 சர்வ தீர்த்தம்
18 சிவ தீர்த்தம்
19 சாத்யாமமிர்த தீர்த்தம்
20 சூரிய தீர்த்தம்
21 சந்திர தீர்த்தம்
22 கோடி தீர்த்தம்
- நாகநாதர் கோவில் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
- இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
நாகேஸ்வரர் கோவில் அல்லது நாகநாதர் கோவில் என்று அழைக்கப்படும் கோவில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
புராணக் கதை
சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவபக்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர். அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்கும் முன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்கு நாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்