search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டையார் பேட்டை பகுதியில் ரூ.8 கோடியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    தண்டையார் பேட்டை பகுதியில் ரூ.8 கோடியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்

    • கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் அதனை சரி செய்வது குறித்து விவாதித்தனர்.
    • கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் ரூ.25 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் தொடங்கப்பட உள்ளது.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டலம் 4-ல் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் அதனை சரி செய்வது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதில் வியாசர்பாடி கல்யாணபுரத்தில் பல்நோக்கு மையம் ரூ. 25 லட்சம் செலவில் தொடங்குவது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகாட்சி தொடக்கப் பள்ளியில் கூட்ட அரங்கம் கட்டுவதற்காக ரூ. 75 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    அதேபோல் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் ரூ.25 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் தொடங்கப்பட உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்குவதற்குள் மழை நீர் கால்வாய் பணிகளை முடித்து சாலைகளை விரைவில் அமைத்திட கோரி அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உத்தரவிட்டார்.

    இதில் தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×