search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தில் கலைத்திருவிழா போட்டிகள்
    X

    விழாவில் இலஞ்சி ஆக்ஸிஸ் வங்கி முதன்மை மேலாளர் மாரியப்பன் பேசிய காட்சி.

    இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தில் கலைத்திருவிழா போட்டிகள்

    • 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி, பாரத் வித்யா மந்திர் பள்ளிகள் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் பெகாசஸ்-2023 கலைத் திருவிழா போட்டிகள் நடை பெற்றது. பாரத் கல்விக் குழும தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரஜ் வரவேற்று பேசினார்.

    கனிஷ்கா மற்றும் உஷாஷீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பாரத் கல்வி குழும தலைவர், செயலாளர், முதல்வர்கள், கல்வி ஆலோசகர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து குத்து விளக்கேற்றி கலை விழா போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    காலையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மழலையர் பிரிவினருக்கு வர்ணம் தீட்டுதல், பாடல் ஒப்புவித்தல், புராண கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் சித்தரிப்பு ஆகிய போட்டிகளும், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடனம், ஆங்கில பொருளறிதல், திறன் தேர்வு, படங்களை தேர்வு செய்து ஒட்டுதல் ஆகிய போட்டிகளும், 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல், தேவையற்ற ஆடைகளில் இருந்து உடை அலங்காரம் செய்தல், நடனம் ஆகிய போட்டிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வடிவமைப்பு, புதிர் ஆகிய போட்டிகளும், 9 முதல் பிளஸ்-2 வரை மிஸ், மாஸ்டர் பெகாசஸ், வினாடி -வினா, குழு பாடல் ஆகிய போட்டிகளும் நடை பெற்றது. மேலும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு குழு பாடல், கணிதம் மற்றும் அறிவியல் திறனறி தேர்வு ஆகிய போட்டிகளும் நடை பெற்றன.

    இதில் 30-க்கும் மேற் பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இலஞ்சி ஆக்ஸிஸ் வங்கி முதன்மை மேலாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடம் பெற்ற பள்ளிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். அவரைத் தொடர்ந்து பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி னர்.

    முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பெகாசஸ் சுழற்சின்ன பரிசும், 2-ம் இடம் பெற்ற எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயமும், 3-ம் இடம் பெற்ற கிங்ஸ் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் விழாவின்போது திறன்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருது கள் வழங்கப்பட்டன. பாரத் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக செயல்பட்டனர். ஆக்ஸிஸ் வங்கி, டிரிஸில் உணவகம், பிரசாந்தி மருத்துவமனை, பி.கே.போட்நிக், வேலவன் புத்தக மையம், செக்யூர் ஐ.டி டெக், இன்பைனைட் லேர்னிங், ரூத் சிப்பிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பெகாசஸ் -2023 கலைத் திருவிழா போட்டிக்கு நன்கொடை அளித்திருந்தனர்.

    ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செய லாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பள்ளி முதல்வர் வனிதா, ஆலோச கர் உஷா ரமேஷ் மற்றும் இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×