search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடிக்கப்படும் மாடுகளை 3 நாட்களில் மீட்காவிட்டால் ஏலம்- உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    X

    பிடிக்கப்படும் மாடுகளை 3 நாட்களில் மீட்காவிட்டால் ஏலம்- உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    • சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் நடந்து சென்ற 4-ம் வகுப்பு மாணவியை மாடு ஒன்று முட்டி தூக்கியது. இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது குறித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. தெருக்களில், சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் திரிய விடக்கூடாது. மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தினை செலுத்தி மீட்காத உரிமையாளரின் கால்நடைகள் பிடித்த 3 நாளில், பகிரங்க பொது ஏலம் விடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×