search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டி யானை
    X

    உடுமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டி யானை

    • யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.
    • வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது.

    இந்தநிலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மானுப்பட்டி பிரிவு, ஈசல் தட்டு கிழக்கு சுற்று, செட்டி மொடக்கு சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.

    இது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் யானை குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) கீதா முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். யானை குட்டி மார்பக பகுதியில் ஏற்பட்ட உள்காயத்தின் காரணமாக இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×