என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிப்பு- ஐகோர்ட்டு உத்தரவு
- ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு மிரண்டு ஓடும்.
- முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை:
கோடை விடுமுறையை முன்னிட்டு, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதை முன்னிட்டு, கடந்த 13-ந் தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு மிரண்டு ஓடும். அதன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டத்துக்கு வனத்துறை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி இடைக்கால தடை விதித்தனர். பின்னர் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று மீண்டும் விசாரித்தனர். பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வனப்பகுதியில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும்போது, பறவைகள் மோதினால் மிகப்பெரிய விபத்தாகி விடும். மனித உயிர் சேதம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில், வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிட கூடாது. அதனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்