என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
7-வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளார்.
இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் கட்சிப் பணிகள் குறித்தும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்தும் விசாரித்து தலைமைக்கு தகவல் அனுப்பி விடுகின்றனர்.
சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் (15 மாதம்) கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதற்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி கூட்டி உள்ளார்.
இதுகுறித்து பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த குழுவில் முதலமைச்சருடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 5 துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
- இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
- மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்.
- மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து உதயநிதி கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலைப் பகுதியில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மருத்துவர் குடுப்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளோம்.
- அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 5-ந்தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கத்திக்குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில்,புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல்… pic.twitter.com/cYtOx8ByYX
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 13, 2024
- தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
- வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி மெல்ல நகர்ந்தது.
இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்ததால் நேற்று சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து மேலும் மேற்கு திசைக்கு வந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அந்த புதிய காற்றழுத்தம் வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் இருந்து வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. வடதமிழகம் - தெற்கு ஆந்திரா கடலோரத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர்.
- 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள விக்டரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 25-ந் தேதியும், மீண்டும் கடந்த 4-ந்தேதியும் என 2 முறை ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் மாணவிகளுக்கு மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர். இதில் கடந்த 4-ந் தேதி மாணவிகளுக்கு இடைவேளை விட்டநேரத்தில் 10.40 மணி முதல் 10.50 மணிவரை ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது. இதனால் பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.
அதன் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ. இப்ராஹிம் தலைமையில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில் மாணவர்களின் பெற்றோருடன் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவத்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதால் உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய பத்தாம் வகுப்பு, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன்.
- பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது:-
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
- அன்று முதல் இன்றுவரை எல்லோராலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.
- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது.
1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களை ஈடுபட வைத்ததிலும், ஈ.வெ.ரா பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டதும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள். மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகைதிருவரங்க நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது.
ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி "பெரியார்" என்று அழைக்கப்பட காரணம். "இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது." என்பதே அந்த தீர்மானம். அன்று முதல் இன்றுவரை எல்லோராலும், "தந்தை பெரியார்" என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது. இந்த மாநாட்டில் ஆற்றிய உரையை குற்றச்சாட்டாக கொண்டுதான் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.
- அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
- கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா?சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 13, 2024
- தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசு.
- மதுவஞ்சேரி மப்பேடு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில்
மதுவஞ்சேரி மப்பேடு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்துசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்வரும் 19 ஆம் தேதிகாலை 10 மணி அளவில்மதுவஞ்சேரி மப்பேடு சந்திப்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… pic.twitter.com/myx6vEvMlJ
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) November 13, 2024
- சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.
- தி.மு.க.வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை.
அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது. சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.
காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட தி.மு.க.வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழ்நாட்டையும் அப்படி ஒரு மோசமான நிலைக்கு திராவிட மாடல் அரசு தள்ளிவிடக்கூடாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வருவாய்த்துறையினருக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலவில்லை என்று தி.மு.க. அரசு கூறுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
- பணியிலிருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை விடுவிக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுக்க ஏதுவாக, மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு போன்ற விவரங்களை மின்னணு முறையில் தொகுத்தளிக்க மத்திய அரசு கோரியிருந்த நிலையில், இந்தப் பணிகளை வருவாய்த் துறை மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஒரு வார காலமாக, மேற்படி பணியை நாமக்கல், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் வரம்பிற்குட்பட்ட அனைத்து வரிகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினருக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலவில்லை என்று தி.மு.க. அரசு கூறுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
எனவே, பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளவும், மேற்படி பணியிலிருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை விடுவிக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்