search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மையான சென்னை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி- 600 பேர் பங்கேற்பு
    X

    தூய்மையான சென்னை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி- 600 பேர் பங்கேற்பு

    • ‘லிட்டர் பிரி சென்னை’ என்ற தோற்றத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார்.
    • வீ ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப் என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜானுக்கும் இந்து குழும பிரதிநிதிகளுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆகஸ்ட் 22-ம் நாளன்று சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக முதலமைச்சர் புகைப்படக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகைப்பட கண்காட்சி, இசைக்கச்சேரி, கடற்கரையில் திரைப்படங்கள் காட்சி படுத்துதல், மாரத்தான், உணவுத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குதிரை வண்டி சவாரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக, தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று சென்னையின் நான்கு இடங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மிதிவண்டிப் பயணம் நடந்தது. ஈ.சி.ஆர்.வி.ஜி.பி., கத்திப்பாரா அர் பன்ஸ்கொயர், அண்ணா நகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் தொடங்கி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது.

    மிதிவண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று உருவாக்கிய 'லிட்டர் பிரி சென்னை' என்ற தோற்றத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார்.

    மிதிவண்டிப் பயணத்தில் அதிக நபர்களை பங்குபெற செய்த வீ ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப் என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜானுக்கும் இந்து குழும பிரதிநிதிகளுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு சிறப்பான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி நடை பெற்ற மிதிவண்டி பயணத்தில் பங்கேற்றவர்களையும், சென்னைதினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் மேயர் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இந்து குழும நிர்வாகிகள், மிதி வண்டி பயணத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×