search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஜவுளி வாங்கும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டது.
    • அதிர்ஷ்டசாலி திவ்யாவை அழைத்து சொகுசு காரை பரிசாக வழங்கினர்.

    பாலக்கோடு 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராம் சில்க் ஜவுளி கடை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஆயுதபூஜை தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு மெகா பம்பர் பரிசாக ரூ.6 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் வழங்குவதாக கே.ஜி.எம்.நிறுவனம் அறிவித்திருந்தது.

    அதனை தொடர்ந்து இன்று குலுக்கல் முறையில் சொகுசு கார் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துணிக்கடை வளாகத்தில் நடைப்பெற்றது.நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம். குழும ஸ்தாபகர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மோகன பிரியா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

    இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜி ஆகியோர் தலைமையில் பரிசு குலுக்கள் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ரங்கநாதன், மங்கள கணபதி நிதி நிறுவன அதிபர் முருகேசன், தி.மு.க மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், வணிகர் சங்க தலைவர் பி.என்.பி.முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சேகர், ஒப்பந்ததாரர் பி.எல்.ஆர்.ரவி, ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப் பட்டதில் சர்க்கரைஆலை பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கு சொகுசு கார் பரிசாக விழுந்தது. உடனடியாக அதிர்ஷ்டசாலி திவ்யாவை அழைத்து சொகுசு காரை பரிசாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் உரிமை யாளர் ராம்குமார் பாலக்கோடு , அக்ரோ தலைவர் சாம்ராஜ், அ.தி.மு.க நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் சங்கர். கால்நடை மருத்துவர் தியாகசீலன், தொழிலதிபர் ஓம் முருகா சரவணன், கருமலை ஆண்டவர் மணி, நகைகடை அதிபர்கள் பாலாஜி, பத்திரிநாத், ஜெர்தலால் பி.ஏ.சி.பி. தலைவர் வீரமணி, பா.ம.க மாவட்ட துணைத் தலைவர் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், சரவணன், ஜெயந்திமோகன், ரூஹித், குருமணி, மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கே.ஜி.எம்.குழும கெளரவ தலைவருமான கே.ஜி.மாதையன் மற்றும் ஸ்ரீராம் சில்க் ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்சியை உதயகுமார் மற்றும் பசல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்கள்.

    • 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அருந்ததியர் காலனியில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அங்கு வசித்து வந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 5 நபர்களும் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர். அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜகுமாரி வெட்ட சென்றபோது அதிர்ச்சி அடைந்த ராஜ்கு–மார் கூச்சலிடவே ஆட்டுக்கா ரன்பட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தொவரந்தொட்டி, பகுதியைச் சார்ந்த தெரிந்த நபர்கள் 5 பேர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே ஆட்டுக்கார பட்டியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக ஒதுக்கிய நிலம் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பகுதிக்குள் புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 3261 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.13.72 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
    • பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலு வலர்கள் தெரிவிக்கின்றனர்

     தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில்,46 விவசாயிகள் கொண்டு வந்த 3261 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.13.72 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    மேலும் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 52 விவசாயிகள் கொண்டு வந்த 4053 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் ரூ.495 க்கும், அதிகபட்சமாக ரூ.265 ரூ க்கும், சராசரியாக ரூ.409-க்கும் என மொத்தம் ரூ.16.58 லட்சத்திற்கு விற்பனை யானது.

    மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலு வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.
    • ரூ.6.27 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே பத்ரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூச்சூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூச்சூா் பகுதி 14 குக்கிரா மங்களை உள்ளடக்கியது. இக்கிராமங்களுக்கு குடிநீா் வசதிகள் செய்து தரப்பட்டு, அங்கன்வாடி மையம், கழிப்பறை வசதி உள்ளிட்ட மீதமுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைந்து முடித்திட போதுமான நடவ டிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    பெரும்பாலை முதல் சாணாரப்பட்டி வரை செல்லும் சாலையானது விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம், சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறையின் சாா்பில் துறைசாா்ந்த அலுவலா்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம், அவற்றை பெறு வதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்துள்ளனா்.

    இந்தப் பகுதியில் உயா்கல்வி தொடரும் பெண்களின் எண்ணி க்கையை உயா்த்தும் வகையில், உயா்கல்வி பயிலும் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட மகளிருக்கான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், அரசால் செயல்ப டுத்தக்கூடிய முதல மைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளா்ச்சிச் திட்டம், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் மகளிா் உரிமைத் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு தகுதியான பய னாளிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.

    இந்த மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வழங்க ப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும், ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகள் அனை வருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க ப்படும் என தெரிவித்தாா்.

    அதனைத் தொடா்ந்து, 110 பயனாளிகளுக்கு ரூ. 34.47 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வாக்காளா் அடையாள அட்டைகள், திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்கள், மா ஒட்டுச்செடி, தக்காளி நாற்று, துவரை விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் ஆறு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 26,000 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

    இம்முகாமில் பென்னா கரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, கோட்டாட்சியா் கீதாராணி, தனி துணை ஆட்சியா் சையது ஹமீது, ஏரியூா் ஒன்றியக்குழு தலைவா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மயில்சாமி, பத்ர அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீரங்காயி தங்கராஜ், பென்னாகரம் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • காலை வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் , பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியில் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இவரை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கில்லை. இது குறித்து மாணவியின் தாய் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

     அதேபோல் அரூர் அடுத்த சுண்டாங்கிபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கார்த்திகேயன் ( 42). விவசாயி, இவருக்கு திருமணம் முடிந்து செண்பகம் (38) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 19 வருடங்கள் ஆன நிலையில் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி கார்த்திகேயன் கோவிலுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவருடைய மனைவி செண்பகம் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .
    • சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.

    பாலக்கோடு,நவ.16-

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு 4 ரோடு பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பாலக்கோடு புறவழிச்சாலையில் நான்குரோடு பகுதி நகரத்தை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

    இதில் பெரியாம்பட்டி சாலை, பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை , ஓசூர்-தருமபுரி சாலை என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இரவு நேரங்களில் நான்கு ரோடு பகுதியில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .

    இப்பகுதியில் எச்சரிக்கை பலகை, சிக்னல் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கரங்களில் வருபவர்கள் அதிக வேகத்தில் வந்து சாலை தடுப்புகள் மீது மோதுவதும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகுவதும் வாடிக்கை யாக உள்ளது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் 4 ரோடு பகுதியில் உயர்மின் கோபுரம் மின்விளக்கு மற்றும் தெருவிளக்கு உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்றும், பிரிவு சாலை என்பதால் அப்பகுதியில் சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம் என்றும் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்ற மது விற்ற 9பேர் கைது செய்தனர்.
    • மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மது விற்றவர்களிடம் இருந்து 270 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கம்பைநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் மற்றும் போலீசார் மொரப்பூர் சாலையில் உள்ள ஜெயம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகம்படும்படி ஒருவர் கையில் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் போலீசாரையும் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    உடனே போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே நவலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் (வயது52) என்பவர் அனுதியின்றி சாக்கு மூட்டையில் 30 மதுபாட்டில்களை விற்ப னைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. யஉடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று அரூர் போலீஸ் சப்-இன்ஸ்–பெக்டர் நாகராஜூக்கு பேரேரி கிராமத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, பேரேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (32) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்ததும், மேலும் அதிக போதை வருவதற்காக ஊமத்தங்காய் சாறை பிழிந்து கலந்து இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியில் உள்ள வினோ பாஜி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவர் மதுபாட்டில்கள் விற்றதும், அதில் ஊமத்தங்காயை சாறு பிழிந்து கலந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் பாலக்கோட்டில் ஒருவரும், மற்ற இடங்களில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மொத்தம் 270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அரூர் அருகே மின் கம்பியை மிதித்த பெண் பலியானர்.
    • தாழ்வான மின் கம்பிகள் கம்பிகள் குறித்து மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் மனைவி பூவி, (55) தனியார் பால் சென்டருக்கு பால் எடுத்துக் கொண்டு செல்லும் போது அருகிலுள்ள கனகராஜ், என்பவர் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து இருபது

    தெரியாமல் பால் ஊற்ற அவசரமாக சென்ற பூவி, அறுந்து விழுந்திருந்த மின் கம்பி மீது தெரியாமல் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.

    பக்கத்து தோட்டக்காரர் பால் எடுத்து வரும்போது பூவி இறந்து கிடந்ததை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு மின் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து லைன் பவர் ஆப் செய்யப்பட்டது.

    அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தப் பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் எட்டிப் பிடிக்கும் உயரத்தில் இருப்பதாகவும், இது சம்பந்தமாக பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

    தாழ்வான மின் கம்பிகள் கம்பிகள் குறித்து மின்சார துறையினர்ருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் நடவடிக்கையின்மையும் அலட்சியப் போக்கே இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சம்பவம் குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் வழக்குபபதிவு செயனது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடை பெறுகிறது.
    • சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மலையனூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆகும்.

    சுற்றியுள்ள ராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊருக்கு, தலைமை மாரியம்மனாக இந்த கோவில் உள்ளது. இந்நிலை–யில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்க–ளால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று பம்பை மேளதாளங்கள் முடங்க, வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் மலையனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீர்த்த குடங்களை ஊர்வல மாக எடுத்து வந்தனர். அழகா கவுண்டனூரில் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடை பெற உள்ளது. இந்த யாக பூஜைகளை இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

    • பொம்மிடி பகுதியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பொம்மிடியில் நெடுஞ்சாலை பகுதியில் கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் தர்மபுரி நெடுஞ்சாலை, சேலம் நெடுஞ்சாலை, ஓமலூர் சாலை, ரெயில் நிலையம், முக்கியகடைவீதி என 5 முனை இடங்களும் சந்திக்கும் பகுதி உள்ளது

    மிகவும் போக்குவரத்து நெரிசலில் இப்பகுதி சிக்கி அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருகிறது

    பொம்மிடி அருகில் உள்ள மலை கிராமங்கள், வீராச்சியூர், பூமரத்–தூர், அக்கரவூர், வே.முத்தம்பட்டி, மணலூர், பையர் நத்தம், பில்பருத்தி என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பொம்மிடிக்கு தங்கள் அன்றாட தேவைக்காக வந்து செல்கின்றனர்.

    பொம்மிடியில் 5-க்கும் மேற்பட்ட வங்கிகளும், முக்கிய ரெயில்கள் நின்று செல்லும் முக்கிய ரெயில் நிலையமாகவும் இருந்து வருகிறது

    இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தாலும், வாகன நெரிசலும் அதிக அளவில் காணப்படுகிறது, இந்த நிலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை இடங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.

    நெடுஞ்சாலை உள்ள இடங்களை சில சமூக விரோதிகள் பிடித்து வைத்துக் கொண்டு வாடகை வசூலித்தும் வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிர மித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்

    இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றனர் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்

    கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சியில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புக் கள், சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வருகின்றனர் இவர்கள் இடங்களை பிடித்து வைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்கள் செல்ல முடியாத அளவி லும் ஆக்கிரமிப்பு செய்து அரசு நிலங்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்

    இது குறித்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, பேரூ ராட்சி நிர்வாகம் என அனைவரிடமும் பல முறை முறையிட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் இடையூறுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாணியாறு அணையிலிருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு, பைப்லைன் அமைக்க 1.38 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறையாக போடப்பட்டுள்ளது.
    • பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த, 13 பேர், காங்., வி.சி., கட்சியில் தலா ஒருவர் என 15 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

    பேரூராட்சி தலைவராக, தி.மு.க.வை சேர்ந்த மாரி, துணைத்தலைவராக ரவி உள்ளனர். இதில், தி.மு.க., மற்றும் காங்., கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் என 8 பேர் சேர்ந்து, பேரூராட்சி தலைவர் மாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் புகார் மனு அளித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், அன்றாட அத்தியாவசிய தேவை பணிகளை செய்யவிடாமல் செயல் அலுவலரை, பேரூராட்சி தலைவர் மாரி தடுத்து வருகிறார். இவரது நெருக்கடியால், ஏற்கனவே பணியாற்றிய செயல் அலுவலர் குமுதா மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். வாணியாறு அணையிலிருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு, பைப்லைன் அமைக்க 1.38 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறையாக போடப்பட்டுள்ளது.

    தனக்கு ஒத்துழைப்பு வழங்காத செயல் அலுவலர் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி வருகிறார். எனவே இவரை பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி கூறியதாவது:-

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தற்போதைய செயல் அலுவலர் கலைராணி, 35 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அவரது தூண்டுதலின்படி கவுன்சிலர்கள் என் மீது தவறான தகவல்களை கூறுகின்றனர். ஆக்கிரமிப்பிலுள்ள, 15 கோடி ரூபாய் மதிப்பிலான பேரூராட்சி இடத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். நான் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், பேரூராட்சி செயல் அலுவலர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் கூறி வருவது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • தருமபுரியில் கல்வி கடன் வழங்கும் விழா நடைபெறுகிறது.இதில் மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    • தருமபுரி மாவட்ட  இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி கடன் பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கருதப்படுகிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா வருகிற 17-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பிரதான சாலை குண்டலப்பட்டியில் இயங்கி வரும் வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் வருகிற 17.11.2023-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    விழாவில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட  இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் மற்றும் மாநிலத்தில் பயிலும் மாண வர்களும்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பர்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும்  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பி டத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் அளிக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×