search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல்:

    காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதே போல் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
    • நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
    • பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் அகோர வீரபத்திரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. குரும்பர் இன மக்கள் சார்பில் நடந்த இந்த விழாவில் கோவில் முன்பு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த ஏதுவாக வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

    பின்னர் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலையில் தேங்காய் உடைக்கும்போதும், சாட்டையடி வாங்கும்போதும் ஒரு பக்தருக்கு கூட ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.


    • அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
    • வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த 10-ந் தேதி கன்னிவலை களை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி தலைமறைவான சோலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவன் (வயது 48), கொளகம்பட்டி அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் ஆகிய 2 பேரும் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அல்லி முத்து என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லி முத்து என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணைக்கு அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதைதொடர்ந்து அவர்களை பிடிக்க வனப் பாதுகாப்புப்படை மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 25-ந் தேதி சிவனை கைது செய்து, மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    பின்னர் சிவன் மீது வனக்குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆலோசனை படியும், சிவனை மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

    • தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்னை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் தருமபுரியில் உள்ள மென்ஸ் வேர் என்னும் ரெடிமேட் கடையில் கடந்த 16-ம் தேதி அந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணி வகைகளை நூதனமான முறையில் திருடி சென்று தப்பியோடி விட்டனர். இதுகுறித்து கடையில் உரிமையாளர் தருமபுரி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததில் தொடர்ந்து தருமபுரி நகர போலீசார் அந்தக் கடையிலும், அப்பகுதியிலும் பதிவாகியிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தருமபுரி நகரில் சுற்றித்திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது

    விசாரணையில் இருவரும் சுமதி, சுஜாதா, என்பதும், அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பெண்கள் இருவரும் வேறு எங்காவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என பல கோணத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

    தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்துள்ள வணிக நிறுவனங்களில், இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சாதாரண நாட்களிலும் தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி பகுதியிலும் மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    • வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் வீசத் தொடங்கியது.
    • வெப்பத்தின் தாக்கம் குறையாமல் மே 5-ம் தேதி 101.3 டிகிரி வெயில் பதிவானது.

    தருமபுரி:

    கோடை காலம் தொடங்கிய நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினந்தோறும் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே பதிவாகி வந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் வீசத் தொடங்கியது. மேலும் 48 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் 108 டிகிரியாக வெப்பம் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு விவசாய பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து கருகி வந்தது.

    மேலும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வந்தனர். இதனால் கோடை மழை கை கொடுக்குமா என்று,பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் எதிர்பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி வரலாறு காணாத அளவில் 108.5 டிகிரி வெப்பம் பதிவாகிய நிலையில், அன்று மாலையே பாலக்கோட்டில் 11 மில்லி மீட்டர் கோடை மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து மே 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பொழிய தொடங்கியது. மே 4-ம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி வெயில் பிறந்தது. அன்று 106.1 டிகிரி வெப்பம் பதிவானது. அன்று மாலையே மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பொழிய தொடங்கியது. இதனால் அன்று மாலையே வெப்பத்தின் அனல் காற்று குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

    இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் மே 5-ம் தேதி 101.3 டிகிரி வெயில் பதிவானது. மே 6-ம் தேதி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 104 டிகிரி வெயில் பதிவானது.

    இதனைத் தொடர்ந்து மழையானது தொடர்ந்து 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பொழிந்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து தருமபுரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமலேயே வீசி வந்த நிலையில் கத்திரி வெயில் எனும் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    மே 7-ம் தேதி 100 டிகிரியில் இருந்து குறைந்து 97.1 டிகிரி வெயில் பதிவானது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் 2 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம், மேலும் குறைந்து 88.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அன்று இரவு தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே பள்ளம் இருக்கின்ற இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் குறைந்து 89.6 டிகிரியாக பதிவாகி இருந்தது.

    மேலும் தொடர்ந்து 43 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் அளவு பதிவாகியிருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறைந்து நேற்று 88.8 டிகிரி குறைவாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோடை மழையால் வெப்பம் குறைந்து காணப்ப டுவதால் தருமபுரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 131.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • பென்னாகரம் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் நடுநிசிவரை கனமழை கொட்டி தீர்த்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில், நேற்று மாலை முதல் இரவு நடுநிசி வரை பரவலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கோடை மழை பெய்து வருகிறது. இந்தாண்டு வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் இருந்தது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனும் அக்கினி வெயில் தொடங்கிய 4ம் தேதி முதல் கோடை மழை ஆரம்பித்து பெய்து வந்தது. இதனை தொடர்ந்து மே,17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 131.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று பிற்பகல் முதல் தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பென்னாகரம் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் நடுநிசிவரை கனமழை கொட்டி தீர்த்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தருமபுரி-8, பாலக்கோடு-29.4, மாரண்டஅள்ளி-3, பென்னாகரம்-48, ஒகேனக்கல்-84, அரூர்-18.4, பாப்பிரெட்டிப்பட்டி-41, மொரப்பூர்-5 என மாவட்டத்தில் நேற்று மொத்தம் 236.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 84 மி.மீ பதிவாகியுள்ளது.

    • காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
    • தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகும் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், இன்று காலை சற்று சரிந்து 1500 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்து உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மீன் சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
    • சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிகளில் 2 ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைகளை வனத்து றையினர் கர்நாடக மாநி லத்திற்கு விரட்டினர்.

    இதையடுத்து அந்த காட்டு யானைகள் மீண்டும் கும்பளம், கடத்தூர் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தஞ்சம் அடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி உத்தரவின் பேரில் ஒசூர் வனசரகர் பார்த்தசாரதி தலைமையில் வன குழுவினர்கள் சூளகிரி, செட்டி பள்ளி, சானமாவு வனப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பொது மக்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு வரவேண்டாம், என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில் செட்டிப்பள்ளி வனப்ப குதியில் இருந்த 2 யானைகளை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிய ளவில் செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேற முயன்றது.

    இதை அறிந்த வனத்துறையினர் அந்த யானையை குண்டு குறுக்கி, கோனேரிப்பள்ளி வழியாக சான மாவு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×