search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பிரதமர் மோடிதான் காரணம்-உதயநிதி ஸ்டாலின்
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பிரதமர் மோடிதான் காரணம்-உதயநிதி ஸ்டாலின்

    • நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள்.
    • மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பவள விழாவில் 75 வயது நிரம்பிய கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத் தட்ட ரூ.50 கோடிக்கு மேல் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு உள்ளது என்றால் உலகத்திலேயே ஒரே ஒரு இயக்கம் எது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    கலைஞரின் நூற்றாண்டை சென்ற ஆண்டு சிறப்பாக கொண்டாடி முடித்தோம். கலைஞரின் நூற்றாண்டில் பெருமையாக சொல்கிறோம். 5 முறை கலைஞர் தமிழகத்தை ஆண்டவர். அதற்கு காரணம் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகள்தான்.

    நீங்கள் இல்லாமல் கலைஞர் கிடையாது. நீங்கள் இல்லாமல் அந்த வெற்றி கிடையாது. உங்களின் உழைப்பு உங்களின் ரத்தம் தான் ஒவ்வொரு வெற்றியையும் கழகத்திற்கு தேடி தந்திருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் காரணம். இந்த வெற்றிக்கான காரணங்கள் மூன்று சொல்வேன். முதல் காரணம் என்ன வென்றால், பிரதமர் நரேந்திர மோடி. அவர்தான் நமக்கு இந்த வெற்றியை தேடி கொடுத்தார்.

    நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போனேன். கிட்டத்தட்ட 23 நாட்கள் பயணம் செய்து அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன்.

    அப்போது அவர்களிடம் பா.ஜ.க.வின் மீதான வெறுப்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தவர் பிரதமர் மோடிதான்.

    சென்னையில் தமிழ்நாட்டில் வெள்ளம், மழை, புயல் வந்த போது ஒருமுறை கூட வந்து எட்டிப் பார்க்காத மோடி தேர்தல் அறிவித்தவுடன் 8 முறை தமிழகம் வந்தார். மாதத்திற்கு 4 முறை வந்து விட்டு போனார்.

    இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் பிரசாரமே முடிந்து விட்டது. அப்போதும் அவர் இங்கு வந்து கன்னியாகுமரியில் விவேகானந்தர் மடத்தில் சென்று தியானம் செய்தார். அவரின் பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம். தமிழ்நாட்டில் என்றைக்குமே வேகாது.

    நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள். இப்போதும் அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். கல்வி உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கி றோம்.

    2-வது காரணம் கழக ஆட்சி அமைந்து கடந்த 3½ வருடங்களில் நம் தலைவர் செய்திருக்கிற மக்கள் பணிகள் சாதனைகள்தான் காரணம்.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மகளி ருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. இந்த திட்டத் தின் மூலம் கிட்டத்தட்ட 3½ வருடத்தில் மட்டும் 520 கோடி பயணங்களை மக ளிர் மேற்கொண்டு இருக்கி றார்கள். ஒவ்வொரு மக ளிரும் மாதந்தோறும் கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் சேமிக் கிறார்கள்.

    அடுத்த திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்க கூடிய 20 லட்சம் குழந்தை களுக்கு தரமான காலை உணவு வழங்கப்படுவது. இதை மற்ற மாநிலங்களும் இப்போது செயல்படுத்த தொடங்கி இருக்கின்றன. அதே போல் புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப் புதல்வன் திட்டம். கல்வி உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படு கிறது.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதை நிறை வேற்றவே முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் தலைவர் இதை செயல்ப டுத்தினார். இப்போது 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    சில இடங்களில் குறைகள் இருக்கிறது. எங்களுக்கு வரவில்லை என்று கோரிக்கை வைத்திருக்கி றார்கள். நான் சுற்றுப்பயணம் செல்லும் போது மகளிர் கேட்கிறார்கள். விரைவில் அதையும் சரி செய்து நம் தலைவர் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகையை கொடுப்பார்.

    3-வது காரணம் கழகத் திற்காக உழைத்த உடன்பி றப்புகள். நம் வெற்றிக் கூட்டணி. இது மிக மிக ஒரு நல்ல கூட்டணி.

    நம் தலைவர் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி கூட்டணி அமைத்து அந்த கூட்டணியை அரவணைத்து கொண்டு போகிறார். அதுதான் மிகப்பெரிய காரணம். கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் மீண்டும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×