search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் பதவி நீட்டிப்பு: `நான் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல-மு.க.ஸ்டாலின்
    X

    கவர்னர் பதவி நீட்டிப்பு: `நான் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல'-மு.க.ஸ்டாலின்

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    Next Story
    ×