என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள்
- கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்கள் வந்த பைபர் படகு அலையில் சிக்கி நிலை தடுமாறி கவிழ்ந்தது.
- கடலில் மூழ்கிய படகு கரை ஒதுங்கியது படகில் இருந்த வலைகள் கடல் நீரில் மூழ்கியது.
மரக்காணம்:
மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 46). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (21), ரவி (24), மணிபால் (35) மற்றும் ரஞ்சித் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.
அப்போது நடுக்கடலில் மீன்களை பிடித்து விட்டு வீடு திரும்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் வந்த பைபர் படகு அலையில் சிக்கி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் வந்த 4 பேரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர். இதை பார்த்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அலையில் சிக்கிய 4 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித் மற்றும் ரவி மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேலும் கடலில் மூழ்கிய படகு கரை ஒதுங்கியது படகில் இருந்த வலைகள் கடல் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் மீனவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.