search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காற்றுடன் மழை- அகழ்வாராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட ராட்சத பந்தல் அடியோடு சாய்ந்தது
    X

    காற்றுடன் மழை- அகழ்வாராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட ராட்சத பந்தல் அடியோடு சாய்ந்தது

    • அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.
    • அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரலாறு சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    தற்பொழுது தமிழக அரசின் உத்தரவுன்படி தொல்லியல் துறை சார்பில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகின்றன. இதில் சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு காசுகளை உருவாக்க அச்சு சுடுமணன் ஆன முத்திரை என அரிய வகையான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் சாலைகள் அமையப் பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.

    மேலும் இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் பந்தல் அடியோடு சாய்ந்தது.

    இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ராட்சத பந்தலை சரிசெய்ய வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×