search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் பலத்த மழை: அமராவதி அணை-நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
    X

    திருப்பூரில் பலத்த மழை: அமராவதி அணை-நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    • இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
    • நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணி முதல் தூரலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இரவு 9 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப ட்டது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக மாநகர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    திருப்பூர் மற்றும் கோவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


    திருப்பூர் ஆண்டி பாளையம்-கல்லூரி சாலை பகுதிகளை இணை க்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த ஒரு வாரமாக அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீரடைவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 3-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர்.

    உடுமலை அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மறையூா், காந்த லூா், கோவில்கடவு உள்ளி ட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் ஓரிரு நாள்களில் அணை மீண்டும் நிரம்பும் என்று எதிா்பார்க்கப்படுவதாக பொது பணித்துறையினா் தெரிவித்துள்ளனா்.

    90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை 6 மணி நில வரப்படி நீா்மட்டம் 81.17 அடியாக உள்ளது. அணைக்கு 1266 கனஅடி நீா்வரத்து உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-25, கலெக்டர் முகாம் அலுவலகம்-55, திருப்பூர் தெற்கு-36, கலெக்டர் அலுவலகம்-30, அவி னாசி-40, ஊத்துக்குளி-59, பல்லடம்-17, தாராபுரம்-19, மூலனூர்-37, குண்டடம்-37, உப்பாறு அணை-50, நல்லதங்காள் ஓடை-25, காங்கயம்-54, வெள்ள கோவில் ஆர்.ஐ. அலுவலகம்-47, வட்டமலை கரை ஓடை அணை-56.40, உடு மலை-5, அமராவதி அணை-6, திருமூர்த்தி அணை-5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, மடத்துக்குளம்-5. மாவட்டம் முழுவதும் 612.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×