search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு போட்டி- மின்சாரம் தாக்கி 14 பார்வையாளர்கள் காயம்
    X

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை காணலாம்

    ஜல்லிக்கட்டு போட்டி- மின்சாரம் தாக்கி 14 பார்வையாளர்கள் காயம்

    • வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
    • காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரசு விதிகளின்படி நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. இதனை அடக்குவதற்கு 300 வீரர்கள் களத்தில் குதித்தனர்.

    வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சில காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது.

    அப்படி சென்ற காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் காயங்களுடன் துடித்தனர். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள் முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×