search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    செங்கோட்டை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • முகாமில் மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே புளியரை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வளாகத்தில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பி.ஆர்.முரளி சங்கர் அறிவுறு த்தலின்படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமலைச்செல்வி மற்றும் தெற்குமேடு ஊராட்சி மன்ற தலைவர் அனு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னா்கள் முருகன் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நலமருத்துவம் காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல்மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநல மருத்துவம், கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    மேலும் ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோ தனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், பரிசோதனை மற்றும் இ.சி.ஜி. போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிபிரசாத் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்து வமல்லா மேற் பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன்,ராஜேந்திரன், வெங்கடேசன், செந்தில்குமார்,கல்யாண சுந்தரம் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். தெற்குமேடு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.இந்த மருத்துவ முகாமில் தெற்குமேடு மற்றும் புளியரை அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் பெற்று சென்றனர்.

    Next Story
    ×