search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது.
    • ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆகஸ்டு 14 தேச பிரிவின் சோக வரலாறு தின மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் அருள் தலைமையில், ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல்ஜெய்துரை, ராஜேஷ், ஒன்றியபொது செயலாளர் கோவிந்தன், முத்தையன், ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி உள்ளிட்ட காவலர்கள் விரைந்து வந்து, ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன.
    • குழந்தைக்கும் ஆரோக்கியமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாது காக்கக் கூடிய குழந்தை களின் நலனைஉறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல் படுவதையும், மையங்களின் பராமரிப்பில் வளர்ப்புச் சூழலை வழங்கு வதையும் உறுதி செய்வது என்பதுஅரசினுடைய முக்கிய கடமையாகும். இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் குழந்தைக்கும் ஆரோக்கி யமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    எனவே, அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, அங்கன்வாடி மைய கட்டடத்தின் நிலை, கழிப்பறை வசதி மற்றும் தூய்மை, சுத்தமான குடிநீர் விநியோகம், சமையலறை கூடம், அங்கன்வாடி மையம்மற்றும் சுற்றுச்சுவர் ஓவியங்கள், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் விளை யாட்டு பயிற்சிகள், அங்கன்வாடி யில் உள்ள கருவிகளின் நிலை, ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதை உறுதி செய்திட தாய்மார்க ளின் கருத்துகளை கேட்டுதெரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின்தேவைகளை அரசிற்கு தெரிவிப்பதை உறுதி செய்து, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகிய வற்றை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர், அத்தியூர், பெரியகொள்ளியூர், இளையனார் குப்பம், எடுத்துனுர், வானபுரம், அவிரியூர், ரிஷிவந்தியம், தொழுவந்தாங்கள் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் பெரிய ஆண்டிச்சி என்கிற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிகாமணி வரவேற்றார். பாலமுருகன், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், மணலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணிகண்டன் (வயது 46), சதீஷ்(30) மற்றும் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலம்பரசன் (38) ஆகியோரின் 3 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    • எடக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் காசாம்பூ (வயது 75). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மகள் சுகந்தியின் பராமறிப்பில் வாழ்ந்து வந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சுகந்தி டீக்கடை வைத்துள்ளார். டீக்கடையில் இருந்து காசாம்பூ நடந்து சென்றார்.

    அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது, இதில் சாலையின் அருகில் விழுந்த காசாம்பூ பலத்த காயங்களுடன் துடிதுடித்து இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை கிளாபாபாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 23). அதே ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், சாமி ஊர்வலத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீரியல் பல்புகள் ஒளிராமல் நின்று போனது. இதனையடுத்து, அதனை சரிசெய்யும் பணியில் பச்சையப்பன் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பச்சையப்பன் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெகடர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.
    • முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.

    பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள், இளைஞர்கள்குளிப்பதை தடுத்திட வேண்டும். இதற்காக குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகளை வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூடிடவும், பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்களை வைத்தி டவும், மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைத்திடவும் வேண்டும். பாதுகாப்பு விழிப்புணர்வைஅதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடற்றதிறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி குழிகளை கண்டறிந்து வருகின்ற 25- ந் தேதிக்குள் பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
    • 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×