search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.
    • சபரியை அதே ஊரை சேர்ந்தவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ச.செல்லம்பட்டு ஊராட்சியில் கடந்த மாதம் 21-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிக்கு வராத 10-க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு வந்ததாக முறைகேடாக பதிவு செய்து அரசு பணத்தை கைப்பற்ற திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி(வயது35) சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருந்த சபரியை அதே ஊரை சேர்ந்த முத்தமிழரசன், கோகுலன், ரகுராம், கவியரசன், தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் ஆபாசமாக ேபசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரி கொடுத்த புகாரின் பேரில் முத்தமிழரசன் உள்பட 6 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 41). விவசாயி. நேற்று இரவு மழை பெய்த போது இவரும், இவரது மனைவி ஜெயாவும் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். அப்போது கெடிலம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. இதில் வேலாயுதம் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள விளக்கூர் புது காலனி பகுதி யை சேர்ந்தவர் தண்டேக் காரன் மகன் முருகவேல் (வயது 30) கொத்த னார். இவர் கடந்த 7- ந் தேதி தனது மனைவி லட்சுமியுடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை அவரது உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த பூட்டையும் உடைத்து அதிலிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசார ணையில் முருக வேலின் அக்காள் மகள் திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
    • 3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய 1 வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுனர், பணியிடத்திற்கு பணி நிய மனம் செய்யப்பட வுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25 வயது வயது நிரம்பியிருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம், சமுதாய பயிற்று னர், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள பயிற்றுனர்கள், இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுனர் (முன்னாள் வட்டார வள பயிற்றுனர் களுக்கு அனைத்து காரணி களையும் கருத்தில் கொண்டு) பணியில் முன்னுரிமை வழங்கப்படும். எம்.எஸ். ஆபிஸ் தெரிந்து இருத்தல் வேண்டும். ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்த தெரிந்திருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், நிறை மதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 213 என்ற முகவரிக்கு 12.08.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது.
    • கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் காற்றின் வேகம் மாறு பாடு காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 

    உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. தற்போது நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது. இதனையடுத்து நாங்கள் நெல் நாற்று நடுவதற்கு ஏற்றார் போல் இந்த மழை உள்ளது என்று கூறினர். இந்த மழை உளுந்தூர்பேட்டை, நலமருதூர், சேந்தநாடு, மடப்பட்டு, எலவனாசூர்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் நீண்டநாட்களாக தண்ணீர் வரத்து இல்லாத கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் அங்கு சென்று வரண்ட கிடந்த ஆறுக்கு தண்ணீர் வரதொடங்கியதை பார்த்துவிட்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குறிச்சியில் 12, தியாகதுருகம் 38, விருகாவூர் 20, கச்சிராயப்பாளையம் 8, அரியலூர் 25, கடுவனூர் 9, கலையநல்லூர் 31, கீழ்பாடி 21, மூரார்பாளையம் 5, மூங்கில்துறைப்பட்டு 24, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 23, வடசிறுவலூர் 24, மணிமுக்தா ஆறு அணை 23.5, வானாபுரம் 26, மாடாம்பூணடி 43 , மணலூரபேட்டை 29, திருக்கோவிலூர் 49, திருப்பாலபந்தல் 37, வேங்கூர் 44, ஆதூர் 17, எறையூர் 15, ஊ.கீரனூர் 14 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 49 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மூரார்பாளை யத்தில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 577.5 மி.மீட்டராகவும், சராசரி 24.06 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்டமாற்று த்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புறவாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனா ளிகளு க்கான சிறப்புதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இதில்தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்த குதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). கர்ப்பிணியான இவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தையின் கையில் வழக்கத்தைவிட தசை அதிகமாக இருந்ததால், குழந்தைகள் வார்டிற்கு தாய் மற்றும் சேயை மாற்றினர். அங்கிருந்த அனைத்து படுக்கையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் ராதிகா மற்றும் அவரது குழந்தைக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பதில் அளித்தார். இது தொடர்பாக இருவருக்குமிடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது.

    இந்நிலையில், வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்த ராதிகா மற்றும் அவரது குழந்தைக்குக்கு தனி அறை ஒதுக்கிடு செய்ய மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார். அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(35). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தை திருப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல்(34) திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜ்கமலை கைது செய்து, மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ராஜ்கமலிடன் விசாரணை செய்து வருகிறார்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
    • 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் அடங்கிய 287 மனுக்களும், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    மொத்தம் 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாரா யணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
    • மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றபோது அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல், பலியானர்வர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில், உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

    ×