என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கரூர்
- கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
- பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார். துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
- அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் புகழூர் நகரக் தி.மு.க. சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது, புகழூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், நடு நாணப்பரப்பு நகராட்சி துவக்கப்பள்ளி, குறுக்குபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், செல்வகுமார், நந்தா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் அண்ணாவேலு, நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
- பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
- பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்பு ப்பாளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கி ன்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.700- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.
கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ண மியை முன்னிட்டு நடை பெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.220- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1,800-க்கும், செவ்வ ந்திப்பூ ரூ.250- க்கும், கனகா ம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம். போனது.
பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.
- வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
- புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, வடிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினர்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குளித்தலை:
கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி மோதலாக உருவானது.
இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தினார்.
இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டது. நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக திருப்பி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்தனர்.
மாணவர் அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.
கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் ,வாங்கல், என். புதூர், கடம்பங்கு றிச்சி,நொய்யல், மரவாபாளையம், தோட்டக்குறிச்சி,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர் .
அதேபோல் சாலை ஓரங்களில் போடப்ப ட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்க டைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணி க்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள் மழையின் காரண மாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர் .தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது .
கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி நிர்வாக திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் சமூக நலத்துறை (சி.எஸ்.ஆர்), நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் முயற்சியினால், புகழூர் நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலையை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் , நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் ஆகியோரிடம் செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (மனிதவளம்)கலைச்செல்வன், முதுநிலை மேலாளர்( மனிதவளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) ராஜா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் காகித ஆலை,நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்ட மங்கலம் அரசு தொடக்க ப்பள்ளி, குந்தாணி பாளை யம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சா வடிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடை பெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, படிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையா ளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்கு ச்சாவடி அலுவ லர்களிடம் வழங்கினர்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் புகளூர் தாசில்தார் முருகன் ஆய்வு நடத்தினார். அதே போல் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் மற்றும் புகளூர் தாசில்தார் முருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புகழூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கருணாநிதி நூற்றாண்டு விழா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்கினர். மருத்துவ பரிசோதனை முகாமில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி கவுன்சிலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் அருகில் பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் ரூபா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள்,தி.மு.க. பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து சேலத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். கரூர் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.
- புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .
வேலாயுதம்பாளை யம்,
கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, எழுத்தா ளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்கு றிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன் ,நக ராட்சி கவுன்சிலர்கள் மற்று ம் தி.மு.க. ஒன்றிய செய லாளர், தி.மு.க.வின் மாவ ட்ட, ஒன்றிய, கிளை , நகர, நிர்வாகிகள், தொண்ட ர்கள், பொதும க்கள் மற்றும் புன்னம் சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகள், மற்றும் புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வந்த போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. தலைமையில் கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் ,வரவேற்ற னர்.கட்சி பொ றுப்பாளர்கள் அதேபோல் தளவாபாளையம் பகுதிக்கு வந்த கருணாநிதி நூற்றா ண்டு விழா எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை தனி துணை ஆட்சியர் சைபுதீன் ,புகழூர் தாசில்தார் முருகன், மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் , புகலூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால்,புஞ்சை தோட்ட க்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ரூபா, பேரூர் செயலாளர் முரளிராஜா தலைமையில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் ,அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள், வருவாய்த் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வை யிட்டனர். அதனைத் தொ டர்ந்து கலைஞர் நூற்றாண்டு தமிழ் தேர் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது. பாது காப்பு பணியில் வேலா யுதம்பா ளையம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்