என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கரூர்
- கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமைதொடங்கி வைத்தார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் டாக்டர் உஷா, டாக்டர் தமிழரசன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சிகிச்சைப் பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை போன்ற பணிகள் மேற்க்கொண்டனர். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. .சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. முகாமில் திருக்காடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
- நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.
வேலாயுதம்பாளையம்
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70 ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.
அதேபோல் 224 குவிண்டால் எடை கொண்ட437-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாக ரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.
அதேபோல் 11.75 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 78ஆயிரத்து 135-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.
- இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
- உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்
கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.
- புகழூர் நகராட்சி பகுதியில் ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
- நகராட்சித் தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்
வேலாயுதம்பாளையம்,
புகழூர் நகராட்சி பகுதியில் நீட் விலக்கு நம் இலக்கு குறித்த ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகராட்சித் தலைவர் குணசேகரன், பதிவு செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன்,கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், நகர வார்டு தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்ட, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- கரூர் மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
- 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோது காடு, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றி லை போன்ற வெற்றிலை களை பயிர் செய்துள்ளனர். பறிக்கப்படும் வெற்றிலை களை பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசி யேசன் வெற்றிலை மண்டிக ளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்வர்.
இங்கு வாங்கப்படும் வெற்றிலைகள் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா , கர்நா டகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் வாங்கிச் சென்றனர்.
நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,200-க்கும் வாங்கிச் சென்றனர்.
- புன்னம் சத்திரம் பகுதியில்டீக்கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
- வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உள்ள பழைய டாஸ்மாக் கடை அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்து பலர் மது அருந்தி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல்களின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பலர் அமர்ந்து கொண்டு மது பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்ததாக நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியில் சேர்ந்த தினேத்( 39) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
- எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், தோகை மலை அருகே காவல்காரன் பட்டியில் வடசேரி கிராமத்திற்குட்பட்ட ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை இந்த பிரச்சினையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது, இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்தும், மற்றும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து தோகைமலை போலீசார் இரு தரப்பினரிட மும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 6-ம் நாள் குளித்தலை சரகத்தில் உள்ள செல்லாண்டிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் பால்வளத்துறை துணைப்பதிவாளர் த.சோ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், நன்றாக பராமரிக்க வேண்டும் என உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
சங்க உறுப்பினர்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்றனர். அதிக பால் உற்பத்தி செய்த உறுப்பினர், நன்றாக கால்நடை பராமரிப்பு ஆகிய உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் கள அலுவலர்கள் குமார், சதீஷ்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, ஆவின் உதவி பொது மேலாளர் மருத்துவர் துரையரசன் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் சங்க உறுப்பினர்களுக்கு தனது சிறப்புரையில் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. சங்க செயலாட்சியர் திரு.ந.முரளி வரவேற்புரையாற்றினார், செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார் , ஆவின் பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
இதேபோல் திருக்கல்யாணம் வைபவத்தை முன்னிட்டு நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
- சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கரூர்,
கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர் ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.
பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லி வலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து பள்ளப்பட்டி, மண்மாரி, வேலம்பட்டி, ரெங்கராஜ்நகர், லிங்கப்பநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வல்லப்பம்பட்டி சந்தப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம், கரடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை சுடுகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பா ளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை யிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை சுடுகா டு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் சேவல் சட்டையில் பணம் கட்டி சூதாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது .
அதன் அடிப்படை யில் அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தி னர். அப்போது சேவல் சண்டை சூதாட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் புன்னம் சத்திரம் அருகே பாண்டி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தெய்வே ந்திரன் (வயது 40), கரூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் (26) ,கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கவிய ரசன் (26),
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசார் காட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (26),கரூர் வேலுச்சாமி புரம் பகுதி யைச் சேர்ந்த கண்ணன் ( 32 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது . 5 பேரையும் கைது செய்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சேவ ல்களை பறி முதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்