search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    புகளூர் அருகேஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48 ). இவர் புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிவில் ஒப்பந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.

    செல்வக்குமாரிடம் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவ னத்தில் நிவின் ஸ்டார் செல்வகுமாரின் சிவில் காண்ட்ராக்டில் ஒப்பந்தம் செய்து பணியை முடித்து விட்டு அதற்கு உண்டான தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் நிவின் ஸ்டார் மேலும் பணம் வேண்டும் என்று செல்வகுமாரிடம் கூறி யுள்ளனர்.

    செல்வகுமார் பாலத்து றையில் உள்ள தனது பெயிண்ட் கடையை இரவு மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கூலக்கவுண்டனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாரை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி அவரை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தை களால் பேசி தாக்கியுள்ளனர்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து செல்வகு மாரிடம் இருந்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் தூத்துக்கு டியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நா ளை முன்னிட்டு தேசிய ஒரு மைப்பாடு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நமது நாட்டில் பெருகிவரும் சாதி, மத, மொ ழி பாகுபாடுகளை எதி ர்க்கும் வகையில் வன்மு றையில் ஈடுபடாமல் மக்களின் உணவுப்பூர்வ ஒற்றுமைக்கு பாடுபடவே ண்டி தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகி ருஷ்ணன், உதவி பொது மேலாளர்( ஐ.டி) பாலமுருகன்,

    முதுநிலை மேலாளர்( மனித வளம்) சிவக்குமார் ,முதுநிலை மேலாளர்( மெக்கானிக்கல் )அசோகன், மேலாளர் (மனித வளம் )வெங்க டேசன் ஆகியோர் தலைமை யில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்

    வேலாயுதம்பா ளையம், 

    கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மல்லீஸ்வரன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகா விற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதா ரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர்.

    அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்த னர்.முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

    • குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடு துறை, பேச்சிப்பா றை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.600- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக புகழூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி முடிக்க கூறினார். ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்
    • ். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்

    குளித்தலை

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளை கோடங்கி பட்டியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 50), பழனிச்சாமி (55).

    இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாப்பக்கா பட்டி செல்லும் வழியில் குளித்தலை முதல் தோகை மலை செல்லும் நெடுஞ்சா லையில் குப்பா ச்சிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி யது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயமடைந்த பழனிச்சா மி குளித்தலை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    இறந்த முருகேசனுக்கு ஒரு மகன் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    தோகைமலை ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மாணவர்கள், வாக்காளர் பட்டியில் திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, தீபக் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரின உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.
    • இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கரூர்

    மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.

    இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு முகாமில் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கூட்டுறவு வார விழா வருடா வருடம் நவம்பர் மாதம் 14 முதல் 20-ந்தேதி வரையில் எதற்காக கொண்டாடப்படுகிறது, நவம்பர் 14-ம் தேதியில் குழந்தைகள் தினத்தன்று ஏன் தொடங்கி நடைபெறுகிறது எனவும், கூட்டுறவில் என்னென்ன வகையான சங்கங்கள் உள்ளது எனவும்,ஆவின் பாலில் உள்ள சத்துக்கள் குறித்தும்,கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் ஏன் உறுப்பினர்களாக சேரவேண்டும் எனவும், உறுப்பினர்களாக சேர்வத னால் உறுப்பினர்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் என்ன எனவும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக யார்யார் எல்லாம் சேரலாம் எனவும், உறுப்பினர்களாக சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்க ளில் அதன் உறுப்பினர்க ளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதனால் சங்கத்திற்கு கிடைக்கக்கூடிய லாபம் கூட்டுறவு சங்கங்களில் சட்டம் மற்றும் விதிகளின் படி சங்க உறுப்பினர்களுக்கே பிரித்து வழங்கப்படுகிறது எனவும்,18-வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் எனவும் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சங்க உறுப்பினர்க ளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு முகாமில், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்திருப்பதி வரவேற்புரையாற்றினார்.கள அலுவலர் நீலாவதி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் விழிப்புணர்வு முகா மில் கலந்துகொண்டார்கள்.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

     வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ,பான்பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .

    இதன் பேரில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

    வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதி யில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோ தனை முகாம் நடைபெற்றது.

    ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த னர். ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோத னை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னை களை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    பொதுமக்கள் கீரை, காய்கறிகள் போன்ற சத்தா ன உணவுகளை அதிக அள வில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். பொது மக்கள் பாது காப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×