என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொரட்டூர் ஏரியில் பறவைகளை கண்காணிப்பது புதிய பொழுதுபோக்காக மாறுகிறது
- கொரட்டூர் ஏரிக்கு 162 வகையான பறவைகள் வருகிறது.
- கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அம்பத்தூர்:
கொரட்டூர் ஏரி சுமார் 900 ஏக்கரில் பரந்து விரிந்து இருந்தது. தற்போது இது ஆக்கிரமிப்புகளினால் 590 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது.
கொரட்டூர் ஏரிக்கு வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். தற்போது 12 வகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் பல்வேறு வகை வெளிமாநில பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் கொரட்டூர் ஏரி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்குள்ள பறவைகைள கண்காணிப்பது புதிய பொழுதுபோக்காக பலருக்கு மாறி உள்ளது.
கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் ஏரிக்கு வரும் பறவைகளை கணக்கெடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி ஆசிரியர் ரவிசங்கர் தலைமையிலான குழுவினர் கொரட்டூர் ஏரியில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 47 வகையான பறவைகள் ஏரிக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிசங்கர் கூறும்போது, 'ஜனவரி மாதம் பறவைகளை பார்ப்பதற்கு ஏற்றது. நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஏரியில் பறவைகளை கண்காணித்து வருகிறேன். தற்போழுது இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்றார்.
இது தொடர்பாக கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் செயலாளர் சேகரன் கூறும்போது, 'கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. ஏரிக்கு 162 வகையான பறவைகள் வருகிறது. சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பறவைகள் வரும்.
இந்த பறவைகள் குறித்து நாங்கள் கணக்கெடுத்து ஆவணப்படுத்தி வருகிறோம். தற்போது கொரட்டூர் ஏரிியில் பறவைகள் கண்காணிப்பது பொதுமக்களின் புதிய பொழுதுபோக்காக மாறி வருகிறது. எனவே கொரட்டூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை கழிவு நீரால் ஏரியின் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது.
தற்போது வரை ஏரிக்கு 51 வகையான பறவைகள் வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் பறவைகள் அதிகம் உள்ளதை பார்க்க முடியும். காலை 6 மணி முதல் 8.30 மணி வரை பறவைகளை ரசிக்க ஏற்ற நேரம் ஆகும்' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்