என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- வி.பி.சிங்கின் சிந்தனைகள் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
- மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன்.
சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் "இடஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநில கல்லுரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
.