search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 17,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்ததால் காவிரி ஆற்றில் இன்னும் கூடுதலாக தண்ணீர் வரத்து கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்தானது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற போதிலும் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்திட்டு பகுதி வரை பரிசல் இயக்கப்படுகிறது.

    தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில், காவிரி ஆற்றில் குளிக்க 27-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்தனர். ஆனால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×