search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரும்பாக்கத்தில் 3 நாட்களாக தண்ணீருக்காக மக்கள் பெரும்பாடு- பைப்லைன் உடைந்து விட்டதாக மெட்ரோ வாட்டர் தகவல்
    X

    பெரும்பாக்கத்தில் 3 நாட்களாக தண்ணீருக்காக மக்கள் பெரும்பாடு- பைப்லைன் உடைந்து விட்டதாக மெட்ரோ வாட்டர் தகவல்

    • வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறுகிறார்கள்.
    • ஒரு நாள் காலை 6 மணி முதல் 7 மணி வரை வழங்குகிறார்கள். இன்னொரு நாள் மதியம் 2 மணிக்கு வழங்குகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாடு வாரியம் சார்பில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு நகரில் பல பகுதிகளில் வசித்தவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர்.

    இந்த குடியிருப்பு பகுதிக்கு மெட்ரோ வாட்டர் மூலம் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த குடியிருப்பில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீருக்காக பெரும்பாடு படுகிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறுகிறார்கள்.

    தண்ணீர் சப்ளை செய்வதில் கூட ஒழுங்கு கிடையாது. ஒரு நாள் காலை 6 மணி முதல் 7 மணி வரை வழங்குகிறார்கள். இன்னொரு நாள் மதியம் 2 மணிக்கு வழங்குகிறார்கள். சில நாட்கள் எந்த நேரத்தில் வழங்குகிறார்கள் எப்போது தண்ணீர் வரும் என்று தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தண்ணீர் சப்ளை துண்டித்து இருப்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, மெட்ரோ வாட்டர் பைப் லைன் உடைந்துள்ளது. அதனால் தான் சப்ளை நிறுத்தப்பட்டது. உடைந்து உள்ள பகுதியை சரி செய்து விட்டோம். தற்காலிகமாக தண்ணீர் வழங்க டேங்கர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    Next Story
    ×