search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூரில்தி.மு.க.,மருத்துவ அணி சார்பில் ரத்த தான முகாம்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமிற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வல்லபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி துணை பொது செயலாளருமான ராஜா ரத்த தான முகாமினை தொட ங்கிவைத்தார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலை மையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர்.

    இதில் 100 யூனிட் ரத்தம் சேகரி க்கப்பட்டு பெர ம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க ப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜா, போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ரத்த தானம் வழங்கிய 100 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட நிர்வாகிகள் ஜெயலட்சுமி, கருணாநிதி, தனபால், பாலச்சந்தர், சுதாகர், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வக்கீல் ராஜே ந்திரன், முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவச ங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்த வர் பிரபாகரன் (வயது 38). விவசாயியான இவர் இரு சக்கர வாகனத்தில் பெர ம்பலூர் சென்றார்.

    எறையூர் பிரிவு பாதை இடதுபுறம் நுழையும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் துடிதுடித்து அதே இடத்தில் பிரபாகரன் உயிரிழந்தார்.

    இதனை அறிந்த பிரபா கரன் மனைவி ரம்யா மற் றும் உறவினர்கள் அதிவேக மாகவும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவே ண்டும். க.எறையூரில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். இறந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மறிய லில் ஈடுபட்டோர்க ளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதின் பேரில் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர்

    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    அகரம்சீகூர்,  

    கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா( வயது25) என்பவரை காதலித்து திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷுக்கு அவரது பெற்றோர் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்ணை வாலி கண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமிர கம்பிகளை சுற்றி மறைத்து கொண்டு திருடி வெளியே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
    • அவரிடம் இருந்த தாமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

     பெரம்பலூர் 

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் தனியாா் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை யில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 95 மீட்டர் தாமிர கம்பிகளை திருடு போனதாக, தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடியவர் யார்? என்று தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த பீகார் மாநிலம், நார்காட்டிய கஞ்ச் தாலுகா, ரோரி கிராமத்தை சேர்ந்த மகேந்திர மிஷ்ராவின் மகன் மனிஷ்குமார் மிஷ்ரா (வயது 33) என்பவர் தனது கால்களில் தாமிர கம்பிகளை சுற்றி மறைத்து கொண்டு திருடி வெளியே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதைடுத்து மனிஷ்குமார் மிஷ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த தாமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூரில் ரூ.1.20 லட்சம் அபராதம்போக்குவரத்து விதிமுறைகளை மீறிஇயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல்

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர் ராஜாமணி மற்றும் குழுவினர், பெரம்பலூர் பகுதிகளில் வாகனத்த ணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியாருக்குச் சொந்தமான கார் மற்றும் வேன்களில் பள்ளிக் குழந்தைகளை மாத வாடகைக்கு அழைத்துச் சென்று வந்த 3 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்கப்ப டாத நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதிச்சான்று புதுப்பிக்கப் படாத சரக்கு வாகனம், வரி செலுத்தாத சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்க ளுக்கு இணக்கக் கட்டண மாக ரூ.1.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில்:- தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்ட றியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்க ளில் அதிக பயணிகளை ஏற்ற க்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. வாகனங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறை களை பின்பற்றி இயக்க வேண்டும். இது சம்பந்தமாக தினமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும் என்று அவர் எச்சரித்தார்.

    • ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
    • பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் தினகரன், குன்னம் தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி கதண்டு கடித்து பலியானார்
    • காட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்ற போது கதண்டு கடித்துள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 73), விவசாயி. நேற்று காலை பெருமாள் தனது காட்டில் கட்டியிருந்த மாட்டை கதண்டு கடித்தது. இதனால் அவர் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றார். அப்போது பெருமாளையும் கதண்டு கடித்தது. இதுகுறித்து தகவலறிந்த பெருமாளின் மகன் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    • விசுவக்குடியில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
    • இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி விசுவக்குடி பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

    • பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சி பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • தற்கொலை காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கமலகண்ணு (வயது 58), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு கீர்த்திவாசன், பத்மவாசன்ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாப்பாத்தி பெரம்பலூர் கோர்ட்டில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பத்மவாசன் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். கமலகண்ணு நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கமலகண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கமலகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலகண்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக உள்ளார். இவருக்கு சரசுவதி (45) என்ற மனைவியும், அருண்குமார் (17) ராஜவிக்னேஷ் (8) ஆகிய மகன்களூம் உள்ளனர்.

    இன்று காலை கணபதி வழக்கம்போல வங்கிக்கு வேலைக்கு சென்றார். பணியில் இருந்த அவர் வங்கு அலுவலகத்தின் உள்ளேயே திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அங்கு பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதி தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியில் செயலாளர் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை:விஜயின் “லியோ” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க
    • குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    நடிகர் விஜய் நடித்த 'லியோ' தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 13-ந் தேதி அன்று சிலகட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி வருகிற 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புகாட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிடவும், காலை 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காணவரும் பொதுக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதித்து ள்ளது.

    மேலும் இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19ம் முதல் 24ம் தேதி வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையா ளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பா டுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்தமுறையில் அமைத்திட வேண்டும் எனவும், திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடு கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், திரையரங்கு களை சுகாதாரமாக பராமரிக்க போதுமானகால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறை களுடன் சிறப்புகாட்சி நடத்தப்பட வேண்டும் எனவும், மேலும் அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிககட்ட ணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் வட்டாட்சியர் 9445000610, வேப்பந்தட்டை வட்டாட்சியர் 9445000611 மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000458 என்ற எண்களில் புகார் தெரிவிக்க லாம். அரசு விதித்துள்ள மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திரையரங்கு களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்படு கிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    டிப்பர் லாரி மீது வேன் மோதிய விபத்தில்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம்

    குன்னம்,  

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×