search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு பெரம்பலூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது
    • மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியை சோ்ந்த செந்தில்வேலின் மகன் புரட்சிதமிழன் (வயது 25) என்பவர் ராணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கானது விசாரணை முடிக்கப்பட்டு நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் புரட்சி தமிழனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவிட்டார். மேற்படி சங்கிலி பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பாடாலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் கோர்ட்டு போலீஸ் முத்தையன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டு தெரிவித்தார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கலெக்டர் கற்பகம் அழைப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 3 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெற்றோரின் ஓய்வூதியத்தினை தொடர்ந்து பெறும் வகையில் பாதுகாவலர் நியமன சான்றிதழ், காதொலி கருவி ஆகியவற்றையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒகளூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மருத்துவ அணியின் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு நோய் கண்டறிதல் , புற்றுநோய் கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை, கண்புரை கண்டறிதல் ,மகப்பேறுமருத்துவம் ,குழந்தைகள் நலம் ,தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை , காது ,மூக்கு ,தொண்டை மருத்துவம் என இந்த இலவச மருத்துவ முகாமில் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது .இம்முகாம் ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைச் செயலாளர் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய கவுன்சிலர்கள் குடியரசு, கருப்பையா ,கலந்து கொண்டனர்.மற்றும் கட்சி நிர்வாகிகள் , டாக்டர்கள் மாநிலத் துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளருமான வல்லபன், மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ,மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி, குன்னம் தொகுதி அமைப்பாளர் சுதாகர் ,பெரம்பலூர் தொகுதி அமைப்பாளர் சிலம்பரசன் ,மாவட்ட துணை அமைப்பாளர் அறிவு ஸ்டாலின் தொகுதி துணை அமைப்பாளர் சோலைமுத்து பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்த இலவச முகாமின் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றார்கள் .

    • றப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என பாமக வலியுறுத்தி உள்ளது
    • பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு தீர்மானம்

     பெரம்பலூர்.

    பெரம்பலூரில் மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் ராஜேந்திரன், அன்பு செல்வன், கண்ண பிரான் , தங்கதுரை ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் வேப்பந்தட்டையில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் பருத்தி ஆராய்ச்சி மையத்தை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த நி லங்கள் கையகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.எனவே கையகப்ப டுத்தப்பட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதில் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராசு வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.    

    • பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:-வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து பெரம்பலூரை அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவோம். இந்த வெற்றியை பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமியிடம் சமர்ப்பிப்பது தான் நமது முதல் இலக்கு.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இளம்பெண்கள் பாசறை அமைப்பில் அதிகளவில் பெண்களை உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், வீரபாண்டியன், ஏ.கே. ராஜேந்திரன், ராணி மற்றும் ஏகேஎன் அசோகன், கல்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் முத்தமிழ்செல்வன், கல்பாடி ஊராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், துறைமங்கலம் சந்திரமோகன், குன்னம் ரெங்கநாதன், வக்கீல்கள் கணேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் காப்போம் திட்ட விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் படையின் வீராங்கனைகள் நேற்று பெரம்பலூர் வந்தனர்.பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், கல்லூரி செயலாளர் விவேகானந்தன், இந்திய ரிசர்வ் படையின் .டி.எஸ்.பி. கார்த்திகேயன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை 2.30 மணியளவில் நவகிரக மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ராகு கேது மற்றும் அனைத்து கிரக மூர்த்திகளுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகார ராசிக்காரர்கள் பரிகார பூஜைகளை செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கவுரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.இதில் வர்த்த சங்க தலைவர் சாமிஇளங்கோவன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ்பாண்டியன், சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், தர்மபரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.

    இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

    இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி
    • பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூ ர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று

    அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்து ள்ளார்.  பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மை ட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மார்க் பெற்று இலவச

    கல்வியில் சேர்க்கை பெற்று 6ம்வகு ப் பு முதல் 1 2 ம் வகுப்பு வரை படித்தார்.  மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநி லத்தில் உள்ள மத்தி ய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில இடம் கிடைத்து சேர்ந்துள்ளார். என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தர வரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி த ாளாளர் ரா ம்கு மா ர் , அகடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்தி ய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரி சையில் இடம் பிடித்த சாதனை படைத்த முதல் மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.

    • மாநில அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டி
    • ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கம்

    Perambalur News

    மாநில அளவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கோ- கோ போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது.

    ராக் சிட்டி சகோதையா நிறுவனம் நடத்திய கோ- கோ போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியானது திருச்சியில் உள்ள திருச்சி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே.வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், புனித யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்லின், துணை முதல்வர் விஜயசாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    பெரம்பலூர் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை தடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசியல் சட்டப்படியான மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சிறு கடன் வழங்க வேண்டும்.ஏழை சிறுபான்மை மக்களுக்கு புதிய பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவை போல் தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.நீதிக்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு முன்வர வேண்டும்.சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளும், வழிபாட்டு தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.











    ×