search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தவர் கைது
    X

    மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தவர் கைது

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகம் ஏற்படும் அளவிற்கு நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்த போது திடீரென ஓட தொடங்கினார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் நத்தவெளியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளவரசன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் தொடர்ந்து கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

    Next Story
    ×