search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் பைக்கில் துரை (54) என்பவரை ஏற்றிக்கொண்டு, கொடைக்கல் கிராமத்திலி ருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் முத்துக் குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு எடுத்துச்சென்ற போது முத்துக்குமார் வழியி லேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டுகோள்
    • ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங் களில் செல்வோர் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத் திபுத்தூர் வழியாககும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில் தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • 21 மூட்டைகள் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.

    ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.

    இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொலு அமைக்கப்பட்டது
    • பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டது.

    தினந்தோறும் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது.

    தெய்வங்கள், புராண இதிகாச நாயகர்கள், குருமார்கள், தேசத்தலை வர்கள் என நமது பாரம்பரிய பண்பாட்டினை பறை சாற்றும் வகையில் அழகிய பொம்மைகளை வைத்திருந்தனர்.

    பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் காலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டா பிஷேகத்துடன் நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் நவராத்திரி சிறப்பு பூஜையும், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.

    இதில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் (வயது42), மணிகண்டன்(40).

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் ரவிக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ரவிக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த சென்னசமுத்திரம் அருகே உள்ள மலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (36) ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி. அணி பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இவர் மினரல் வாட்டர் கேன்களை கடை கடையாக சப்ளை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் வாணியன் சத்திரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டி கடையில் மினரல் வாட்டர் கேன்களை இறக்கி கொண்டு இருந்த போது போதையில் அங்கிருந்த கடப்பேரி காலனி பகுதியை சேர்ந்த கோபி (27), சிலம்பரசன் (29) மற்றும் சிலர் பார்த்திபனிடம் வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து பார்த்திபன் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக சென்றனர். மது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் ஆகியோர் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாலாஜா கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ,மகளிர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எம்.சி.பூங்காவனம் ,கே.துரை,பி.பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபு உள்பட நிர்வாகிகள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன்.எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சாபுதீன், நிர்வாகிகள் வேதகிரி,முனுசாமி,பூண்டி.பிரகாஷ், மூர்த்தி, நவ்லாக்.தயாளன், தனஞ்செழியன் உள்பட மாவட்ட,ஒன்றிய, கிளைகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் சிக்கியது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் அம்மூரில் இருந்து ரெட்டியூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அம்மூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பதும், அவர்கள் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாவட்ட வனத்துறை‌ சார்பில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட வனத்துறை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க சாலிடரிடாட் மற்றும் ஸ்விட்ச் ஆசியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 600 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க நிகழ்ச்சி ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா,பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலிடரிடாட் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் எலியோனோரா அவாக்லியானோ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள். ரவிசந்திரன்,சந்திரசேகர், மாவட்ட வனத்துறை அலுவலர் கலாநிதி, வனச்சரக அலுவலர் சரவணபாபு , சாலிடரிடாட் மேலாளர் சுரில் பன்னிர்செல்வம் மற்றும் அதிகாரிகள், தொழில திபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • பெற்றோர்கள் எதிர்ப்பு
    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவருடைய மகன் சூரியபிரசாத். வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், சின்னதகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் கவுதமி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரவணனும், கவுதமியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    • மாணவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்
    • 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் காந்தி வரவேற்றார். இதில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 4 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமுர்த்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி, பானுசந்தர் திலீபன், சேகர் தினேஷ், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×