search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
    • சாலை விபத்தில் உயிரிழந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள புதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் இளங்கோ (29). இவர் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்கரராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 20-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற இளங்கோ பணி முடிந்தவுடன் நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது பனப்பாக்கம் பெருவளையம் சாலையில் விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து, போலீஸ்காரர் இளங்கோ வின் இறுதிச்ச டங்கு அவரது சொந்த ஊரான பாணாவரம் அடுத்த புதூரில் நேற்று நடந்தது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சற்குணன் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இளங்கோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் முன்னதாக காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர், இளங்கோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் பாய் (வயது 33). இவர் பைக்கில் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டி.வி.க்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக ஒரேபைக்கில் வந்த 3 வாலிபர்கள் ரிஸ்வானை கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 எல்.இ.டி டிவிக்களை பறித்துக்கொண்டு

    தப்பினர்.இதுகுறித்த காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரிஸ்வான் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மாமுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வரங்கம் மகன் சுஜித்(23) என்பவர் தனது 2 நன்பர்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் சுஜித்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

    • குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.

    கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு ஆகிய கிராமங்களில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.

    முகமூடி கொள்ளையர்கள் பற்றிய வீண் வதந்தியை நம்பவேண்டாம் மேலும் அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வர வேண்டும்.

    மேலும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    • கடன் தொல்லையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மாலை தீடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

    சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் வஜ்ஜிரவேல் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூரில் இருந்து திருத்தணி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு வாலாஜாவில் எம்.பி.டி சாலையில் சென்றது பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி அருகே வந்த போது பஸ்சின் முன்பு ஹோல்ஸில் கரும்புகை வெளிவந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    இதை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் பஸ் டிரைவரிடம் கூறியுள்ளனர்.

    இதை தொடர்ந்து பஸ் டிரைவர் பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார்.

    பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பிடிக்காமல் இருக்க பஸ்சின் முன்பக்கத்தில் தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ேராந்து பணி
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் தலைமையில் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பொன்னையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் மடக்கிபிடித்தனர்.

    போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 25-ந்தேதி ஆற்காட்டில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெரும் நோக்கில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டபடிப்பு ,நர்சிங், பொறியியல், எம்.பி.ஏ உள்பட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
    • செயற்பொறியாளர் தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை 22-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம்,திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெலி, முசிறி, ஆகிய கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
    • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

    இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

    அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை
    • மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்;

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தைக்கு பெரப்பேரி, கோடம்பாக்கம், உளியநல்லூர், மேலேரி, வெளிதாங்கிபுரம், கீழ்களத்தூர், செல்வமந்தை ஆகிய கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் சந்தையானது பாணாவரம் செல்லும் சாலை ஓரத்திலே இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனால் சந்தையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது கீழ்வீதி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சந்தைக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று வியாபாரிகளிடம் கூறினார்.

    ×