search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 3 மாதமே ஆன கை குழந்தை உள்ளது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் ரஜினி (வயது28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சரளா (22) என்கிற மனைவியும், 3 மாதமே ஆன கை குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

    குழந்தையின் தொடர் அழுகை சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் மயங்கிய நிலையில் இருந்த சரளாவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாலாஜா பகுதிகளிலும் நடைபெற்று வந்த திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந் நிலையில் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் விளாபாக்கம் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் குரு (வயது 33) என தெரிய வந்தது. தனியாக உள்ள பெண்கள் மற்றும் வயதான பெண்க ளிடம் அச்சுறுத்தி நகை களை பறித்ததாக கூறினார்.

    அவரிடம் இருந்து 4 பவுன் நகை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினார்
    • 3 பைக்குகள் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் வி.சி.மோட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நகர காங்கிரஸ் சார்பில் ,மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே.பாஸ்கர் கலந்து கொண்டு இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர்,வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி. மோட்டூர். கணேசன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன் பாடி எ.எம்.பேட்டையை சேர்ந்தவர் சற்குணம்(வயது 39). அதேபகுதியை சேர்ந்தவர் பாலாஜி(22), விக்னேஷ் (22).கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 3 பேரும் சென்னையில் நடந்து வரும் கட்டிட பணிக்கு சென்றனர். அங்கு சாரம் கட்டும் பணியை முடித்து விட்டு இரவு ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொ ண்டிருந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கூட்ரோடு அருகே சென்ற போது அங்குள்ள வளைவில் லோடு ஆட்டோவும், இவர்கள் சென்ற பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன டியாக அங்கிருந்த பொதுமக்கள், சற்குணத்தை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலுல், விக்னேஷை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள்ளான பைக், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சற்குணம் நேற்று அதிகாலைசிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இதையடுத்து சற்குணத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைவ்பஜார் பகுதியில் உள்ள, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர் சன்னதி, நவகிரகங்கள், துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் லட்சுமணன், மகாத்மா காந்தி முதியோர் காப்பக துணை தலைவர் எஸ் ஆர் பி. பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆற்காடு தொழிலதிபர் ஏவி.சாரதி, வேதபுரி, காளத்தி குமரவேல், திருஞானம் மோகன், மணி, தினகரன், கார்த்திகேயன், நரசிம்மன், தண்டபாணி, மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு
    • மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு முகாமில் 38 மனுக்கள் பெறப்பட்டன.

    மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், பிழை திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.

    முகாம் வட்ட வழங்கல் அலுவலர் சத்யா தலைமை தாங்கி ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட 38 மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில் 36 மனுக்கள் தீர்வு காணப்பட்டு 2 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகன், வட்ட வழங்கல் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் நவம்பர் 14-ந்தேதி தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20-ந்தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மேல்நிலை ப்பள்ளியில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • விண்ணப்பதாரர்களை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மாற்றுத்திறனாளிகளின் வயதினை தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பொருட்டு வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலெக்டர் தலைமையில்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக அடங்கிய குழுவினர் விண்ணப்பதாரர்களை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    எனவே விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் சரக டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
    • சோதனை‌ சாவடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள தாமரைப்பாக்கம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய சோதனை சாவடி கட்டிடங்கள் மற்றும் மொத்தமுள்ள 9 சோதனை சாவடிகளிலும் பொருத்தப்ப ட்டுள்ள 18 அதிநவீன கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கினார்.

    கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திறந்து வைத்து, கேமராக்களின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையி லிருந்து பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்ட ர்கள், சப்-இன்ஸ்பெக்ட ர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வ ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் ஆகியோர் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • பிரசாதம் வழங்கப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மட்டுமே பச்சைக் கல்லினால் ஆன 4 அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் சகஸ்ராஜ்ஜுனர் என்னும் கார்த்தவீர்யாஜுனருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சிறப்பு வாய்ந்த கார்த்தவீர்யாஜுனருக்கு நாளை காலை ஜெயந்தி விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்,இழந்த சொத்துகள்,பொருளையும் மீட்கவும் , நீண்ட ஆயுள் வேண்டியும் கார்த்தவீர்யாஜுனர்

    ஹோமமும், பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு நவ கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலியும், தீப சேவையும் நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன ரக்ஷையுடன் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

    நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பீடாதிபதி டாக்டர்.முரளிதர சுவாமிகள் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் மனு
    • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    ×