என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோலியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.63 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ByMaalaimalar26 Sept 2023 3:09 PM IST (Updated: 26 Sept 2023 3:09 PM IST)
- கோவிலுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது.
- இந்த அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பிலான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை, மணப்பாக்கம், குழலி அம்மன் என்கின்ற கோலியம்மன் கோவிலுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் சென்னை மண்டலம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் இன்று சென்னை மண்டல உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சி.நித்யாவின் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.63 கோடியாகும்.
இந்த அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பிலான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது கோவில் செயல் அலுவலர் சக்தி, சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Next Story
×